தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Abhirami Has Said That She Is Ready To Act In The Second Part Of Virumandi Movie

Actress Abhirami: என்னை கூப்பிட்டா நான் போவேன்.. நடிகை அபிராமி பதில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 06, 2024 04:43 PM IST

கமல்ஹாசன் விருமாண்டி இரண்டாம் பாகத்திற்கு நடிக்க என்னை அழைத்தால் நான் கட்டாயம் ஒப்புக் கொள்வேன் என நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.

நடிகை அபிராமி
நடிகை அபிராமி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வரிசையில் ஒரு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்டு இன்று வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருபவர் நடிகை அபிராமி. விருமாண்டி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய உச்சத்தை அடைந்தவர் இவர்.

அர்ஜுன் நடித்து வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் அபிராமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன் நடித்து வெளியான விருமாண்டி திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய நடிகையாக அவதாரம் எடுத்தார். இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.

விருமாண்டி படத்தில் நடித்த பிறகு எந்த சினிமாவிலும் நடிக்காமல் பத்து ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். அதற்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள அபிராமி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

தமிழில் ஆர் யூ ஓகே பேபி, மகாராஜா, தெலுங்கில் வாஷிங் மெஷின் என பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி ஒன்று நீதிபதியாகவும் இருந்து வருகிறார். தற்போது பிசியாக இருக்கும் அபிராமி பல தொலைக்காட்சிகளுக்கு மற்றும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்படி சமீபத்திய நேர்காணல் ஒன்று அபிராமியிடம் விருமாண்டி திரைப்படம் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் நீங்கள் நடிப்பீர்களா என கேட்டனர். அதற்கு அபிராமி விருமாண்டி திரைப்படத்தைப் பொறுத்தவரை அதில் அன்னலட்சுமி இறந்துவிட்டாள். இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் நான் எப்படி நடிக்க முடியும். ஒரு வேளை கமலஹாசன் மீண்டும் இந்த திரைப்படத்தை எடுத்தால், அவர் என்னை அழைத்தால் நான் கண்டிப்பாக மறுக்க முடியாது. கட்டாயம் நடிப்பேன் என தெரிவித்தார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.