'பிக்பாஸ் வாழ்க்கையவே மாத்திடுச்சு.. அது நாளுக்கு நாள் ஆச்சரியத்த தருது'- மனம் திறந்த விஜய் சேதுபதி
பிக்பாஸ் நிகழ்ச்சி தன் வாழ்க்கையின் அணுகுமுறையையே மாற்றிவிட்டதாக விஜய் சேதுபதி பிக்பாஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது முதன் முறையாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற ஸ்லோகனோடு தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பத்தின் விஜய் சேதுபதி அதிரடி பேச்சால் களைகட்டியது. பின் அது மெல்ல மெல்ல டிஆர்பியில் சரிந்தது. அதை சமாளிக்க எடுக்கப்படட் சில முயற்சிகள் தோல்வியை சந்தித்தாலும் சமீப காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று விறுவிறுப்பாக சென்று வருகிறது.
வாழ்க்கையில் ஒரு அங்கமா மாறிடுச்சி
இந்நிலையில், விடுதலை 2 படக்குழுவினருடன் கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில், "பிக்பாஸ் என் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமான ஒன்னா மாறிடுச்சு. பிக்பாஸ் கொடுத்த அனுபவம் ரொம்ப பெருசு. அதோட வேலை ரொம்ப அதிகமா இருந்தாலும் அது சொல்லிக் கொடுக்கும் பாடம் அதிகம்.
முதல்ல நான் மறுத்தேன்
என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிய எடுத்து நடத்த சொல்லி சொன்னப்போ நான் முடியாதுன்னு தான் சொன்னேன். இன்னொருத்தர் நடத்திட்டு வர நிகழ்ச்சிய நான் எப்படி எடுத்து நடத்த முடியும்ன்னு நெனச்சேன். ஆனா அந்த ஷோ டைரக்டர் பிரதீப் என்கிட்ட சொல்லும் போது இது உங்க வாழ்க்கைக்கும் புது அனுபவமாக இருக்கும்ன்னு சொன்னாரு.