கிளுகிளுப்பான ஹீரோவாக தம்பி ராமையா.. ராஜாகிளி பட விழாவில் அரவிந்த் சாமிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என கேள்வி
கிளுகிளுப்பான ஹீரோவாக தம்பி ராமையா.. ராஜாகிளி பட விழாவில் அரவிந்த் சாமிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜாகிளி பட விழாவில் அரவிந்த் சாமிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என நடிகர் தம்பி ராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் மற்றும் இசை அமைத்து ஹீரோவாக நடித்த படம், ராஜாகிளி. இப்படத்தை அவரது மகன் உமாபதி ராமையா திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தம்பி ராமையா, ‘’திரையுலகம் சகோதரர் பிரபு சாலமன் மூலமாக ஒரு பெயரைக் கொடுத்த பிறகு, நான் சந்திக்கும் தொழிலதிபர்கள் எல்லாம் பேசும்போது உண்மையைக் கொட்டிவிடுவார்கள். தனுசு ராசி, மீன லக்கினம், பூராடம் என்பதை நம்பத்தான் தோன்றுகிறது. எல்லா சொல்லிடுறாங்க. அப்படி பல தொழிலதிபர்களின் கதையைக்கேட்கும்போது, ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர் மனிதர் புனிதராக இருக்கக்கூடிய ஒரு அற்புதமான ஆத்மா, அவருடைய நினைவுகள், வாழ்ந்த வாழ்க்கை, ஒட்டுமொத்த ரகசியத்தையும் பச்சைக் குழந்தைபோல், இளநீருக்கு இருக்கும் தண்ணீர் போல், என்னிடம் அப்படி கொட்டி தீர்த்துவிட்டார். அது மனதுக்குள் இருந்தது.
இதை எப்பயாவது வடிவப்படுத்தணும் நினைக்கும்போதுதான், எனது தாய் எனக்குக் கொடுக்கவில்லை. இன்னொரு தாய்க்குப் பிறந்து எனக்கு தம்பியாக இருந்து தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் வாழ்வின் உச்சமும் சொச்சமும் எல்லாமே சமுத்திரக்கனி தான். இந்த சினிமா என்னை எத்தனையோ முறை புரட்டி எடுத்திருக்கிறது, என்னைப் பயன்படுத்துவார்கள். பயணம் செய்வார்கள். என்னைப் பயன்படுத்துவார்கள். பயணம் செய்வார்கள்.
சமுத்திரக்கனி எனக்கு அருமைத்தம்பி: தம்பி ராமையா
பயன்படுத்துவார்கள் என் பக்கத்திலும் இருப்பார்கள் என்றால் என் அருமைத் தம்பி சமுத்திரக்கனி தான்.
என்னை ஒட்டுமொத்த சொந்தமும் விட்டுவிட்டுப்போனாலும் ஏன் தம்பி சமுத்திரக்கனி இருக்கான் என இருப்பேன். வீட்டில் டீ 7 மணிக்கு கொடுத்து 7.10க்கு தாமதமாகக் கொடுத்தாலே, எனக்குத் தாழ்வு மனப்பான்மை ஆகிடும். என்னடா, 5 நாட்களாக சூட்டிங் போகவில்லை, மரியாதை குறைச்சிடுச்சு என்று. உடனே, சமுத்திரக்கனி வீட்டுக்குப் போயிடுவேன்னு சொல்லியே மிரட்டிட்டு இருப்பேன்.
ஒரு குணச்சித்திர நடிகன் நான். வினோதய சித்தம் என்ற ஒரு கதையை எனக்காகப் படைத்து போற இடம், வருகிற இடம் எல்லாம் என்னைக் கொண்டாட வைத்துவிட்டார், சமுத்திரக்கனி.
இந்த வினோதய சித்தத்தை தம்பி சமுத்திரக்கனி கொடுக்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக இந்தக் கதையை வடிவமைத்திருக்க முடியாது. வாய்ப்பே இல்லை. எப்படிப்பார்த்தாலும் பிள்ளையார் சுழி, 786, சிலுவை இவை மூன்றையும் போட்ட அடிநாதம், தம்பி சமுத்திரக்கனி. என்னை வைத்து எழுதி வெற்றிப்படமாக்கியவர். 22 காட்சி, 19 நாட்கள், வினோதய சித்தம் என்கிற அபரிவிதமான படத்தைக் கொடுத்துச்சு.
அரவிந்த் சாமிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்: தம்பி ராமையா
அதன்பின், எல்லா நேரமும் என் பசிக்கு மற்றவர்கள் சமைத்துக் கொண்டுவருவார்களா, மனைவி ஊருக்குப் போயிட்டால் நாம் தானே சமைக்கணும். அதுபோல், நமக்குரிய நல்ல கதையை நாமே சமைப்போம் என இந்தக் கதையை சமைத்தேன். நான் நாயகன் எனும்போது, இவரா ஹீரோ என்று எண்ணாமல் கதாநாயகிகள் நடித்தனர். இப்போது சினிமா மாறிவிட்டது. எல்லாமே ஒரு அனுபவம் தான்.
அரவிந்த் சாமி சாருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம், எனக்கும் அரவிந்த் சாமி சாருக்கும் என்ன 45 வயதா வித்தியாசம். என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையினால் தான், அவருக்கு தந்தையாக நடித்தேன். ஊடகத்தில் ஒரு சகோதரி சொன்னாங்க. ராஜா இங்கே. கிளிகள் எங்கே என்றார்கள்.
ராஜா இங்கே. மேடைகளில் கிளி இருக்கு. இன்னும் இரண்டு மூன்று கிளிகள் இருக்கு. அந்தக் கிளிக்கு இறக்கை முளைச்சு, வெளியே பறந்திட்டு இருக்கு’’ என்றார், நடிகர் தம்பி ராமையா.
டாபிக்ஸ்