அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு

அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு

Marimuthu M HT Tamil Published Nov 14, 2024 05:22 PM IST
Marimuthu M HT Tamil
Published Nov 14, 2024 05:22 PM IST

அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு

அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு
அரவிந்த் சாமிக்கு மனிதாபிமானமே இல்ல.. திடீர் தளபதினு ஒருத்தர் வந்திருக்கார்.. பட்டங்கள் எதுக்கு?.. கிழித்த பாலாஜி பிரபு

இதுதொடர்பாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ அஜித் வந்து சில வருடங்களுக்கு முன்பே தன்னை தல என்று கூப்பிடவேண்டாம் என்று கூறிவிட்டார். தனது ரசிகர் மன்றத்தையும் கலைத்துவிட்டார். அவர் தன்னை நடிகனாக மட்டும் பாருங்கள். நான் நடிப்பதற்கு சம்பளம் வாங்குகிறேன். நீங்கள் என்னை தியேட்டரில் ரசிங்க, ஆனால், எனக்குப் பட்டம் கொடுப்பது, ரசிகர் மன்றம் வைப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டார்.

அப்படி அறிவிப்பு வெளியானதால், அஜித்துக்கு தன்னுடைய மார்க்கெட் குறைந்ததாக எனக்குத் தெரியவே இல்லை. அவருக்கும் பெரிய ஓபனிங் இருக்குது. வெறித்தனமான பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்னும் இருக்குது. அவர் சொன்னதால் இல்லாமல் போய்விடவில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கமல்ஹாசன் சார் போன வாரம் தான் தன்னுடைய எழுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார்.

அஜித் சாருக்கு இருந்த பக்குவம் கமல்ஹாசனுக்கு முன்பே வந்திருக்கணும்: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு

70ஆவது வயதில் தன்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று கமல்ஹாசனுக்கு பக்குவம் வந்திருக்கிறது. இந்த ஞானம் அவருக்கு சிறுவயதாக இருக்கும்போதே வந்திருக்கணும். அஜித் சார் சொல்லி பல வருடங்களுக்குப் பின், உலக நாயகன் பட்டத்தின் எல்லா விஷயங்களையும் அனுபவித்துவிட்டு, இன்றைக்கு வேண்டாம் என்கிறார், கமல்ஹாசன். ஏன் என்று தெரியலை. அவரை மாதிரியான ஆட்கள் முன்னாடியே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.

இருந்தாலும் கமல்ஹாசன் வேண்டாம் என்று சொல்வதை நானும் வரவேற்கிறேன். விஜய் சார் நடிக்க வந்தபோது, இளைய தளபதின்னு போட்டுக்கிட்டார். 30 வருடங்கள் கழித்து தளபதின்னு போட்டுக்கிறார். இப்போது இந்தப் பட்டத்தை இளைய தளபதியில் இருந்து தளபதின்னு போடுவதால் பக்குவமானவர் ஆகிவிடுவாரா விஜய்?.

இந்தப் பக்குவம் இயற்கையாகவே வரணும். பட்டங்களை இளைய தளபதியில் இருந்து தளபதி என்று போடுவதால் பக்குவமான நடிகர் என்று விஜயை சொல்லிவிட முடியாது.

உங்களுக்கு நிறைய சமூகப் பொறுப்பு வரணும். வயது ஆக ஆக மக்களுக்குச் செய்யணும் என்கிற எண்ணம் வரணும். அதைவிட்டுட்டு பட்டத்தை மாத்திக்கிறேன் அப்படிங்கிறதால், என்ன வரும் என்று எனக்குத் தெரியவில்லை.

யார் அந்த திடீர் தளபதி?: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விளக்கம்

பரத் வந்து சின்ன தளபதி, விஷால் வந்து புரட்சி தளபதி. இப்படி எல்லாரும் தளபதி அப்படிங்கிற பட்டத்தை எடுத்துப் போட்டுக்கிறாங்க. விஜய்யோட இளைய தளபதி பட்டம் காலியாக இருக்கு.

உடனே, அந்த இடத்துக்கு சிவகார்த்திகேயன் வரப்போறதாகச் சொல்றாங்க. எல்லோரும் அவரை என்ன சொல்றாங்க, திடீர் தளபதிங்கிறாங்க. தி கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியைக் கொடுப்பதால், சிவகார்த்திகேயன் விஜய் ஆகிவிடுவாரா?. ஆகமாட்டார். ஏனென்றால், மக்கள் விஜயையோ அஜித்தையோ அந்த இடத்தில் கொண்டுபோய் உட்கார வைச்சிருக்காங்க. அப்படியென்றால் நாளைக்கு விஜய் சி.எம். ஆகிட்டார் என்றால், அடுத்து சிவகார்த்திகேயன் சி.எம். ஆகிடுவாரா. ஆகமாட்டார். இது எல்லாம் அபத்தமாக இருக்கு.

சீனிவாசன் என்கிற நடிகர் என்ன பவரை காட்டினார், அவருக்கெல்லாம் பவர் ஸ்டார் என்கிற பட்டம். நடிகர்களுக்குப் பட்டம் கொடுப்பதை நிறுத்தணும் சார். ரசிகர்களாக சேர்ந்து செங்கல்வாயன் சீனிவாசன் அப்படி ஒரு பட்டம் கொடுத்தால் நீங்கள் ஏத்துக்குவீங்களா?. வேணாம்ன்னு தானே சொல்வீங்க. பிறகு எதற்கு ஓகேன்னு சொல்றீங்க.

இனிமேல் வரக்கூடிய பட்டங்களை நடிகர்கள் வெறுத்து ஒதுக்கணும். சூப்பர் ஸ்டார் பட்டத்தை பைரவியில் வேண்டாம் என்று சொன்ன ரஜினிகாந்த், இன்றைக்கு அந்தப் பட்டத்தை விட்டுக்கொடுக்க மனசில்லை.

அரவிந்த் சாமி உடன் போராடிய மனோ பாலா:

மனோ பாலா சார், சதுரங்க வேட்டை 2 அப்படிங்கிற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தை வெளியில் கொண்டு வர நிறைய முயற்சிகள் செய்தார். கடைசியில் இறந்தும்போயிட்டார். அதில் ஹீரோவாக நடித்த அரவிந்த் சாமிக்கு கொஞ்சம் சம்பளம் பாக்கி இருக்கு. அந்த சம்பள பாக்கியைக் கொடுத்தால் தான் நான் டப்பிங் வருவேன்னு சொல்லிட்டார்.

கொஞ்சமாவது இறங்கி வரணும். மனிதாபிமானம்ன்னு ஒன்னு இருக்கணும். அது சுத்தமாகவே நடிகர்களுக்குக் கிடையாது. அப்படிப்பட்ட நடிகர்களை தளபதி, உலகநாயகன், சின்ன தளபதி, புரட்சி தளபதி, திடீர் தளபதி, அடுத்து நாளைக்கு வரும் கவின் அப்படிங்கிற நடிகர் நானும் தளபதின்னு போட்டுக்கிடுவார். எல்லாம் இப்படி வந்து கேவலப்படுத்துறாங்க’’ என பேசி முடித்தார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

நன்றி: மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!