Aishwarya Arjun: “தம்பி ராமையா போட்ட கண்டிஷன்.. வழி இல்லாமல் ஓகே சொன்னாரா ஆக்சன்கிங்? - அர்ஜூன் மகள் கல்யாண சீக்ரெட்ஸ்!
Aishwarya Arjun: பிரபலங்களின் வீடுகளில் அப்படி கிடையாது. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும், அது மீடியாக்களில் செய்தியாக மாறிவிடும். - அர்ஜூன் மகள் கல்யாண சீக்ரெட்ஸ்!

Aishwarya Arjun: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில், தம்பி ராமையாவின் மகனான உமா ராமையா போட்டியாளராக களம் இறங்கினார். அந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கினார். அப்போது அர்ஜூனுடன் இருந்த ஐஸ்வர்யாவிற்கும், உமாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நீண்ட நாட்களாக இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். அதன் பின்னர் பெற்றோரிடம் தங்களது காதலை தெரிவித்து சம்மதம் வாங்கினர்.
திருமணம் அரங்கேறியது
இவர்களது திருமணம் சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான ஹனுமன் கோயிலில் வைத்து பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில், திருமண வரவேற்பு நடந்தது. இதில் முதல்வர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் அதில் பேசும் போது, “சாதாரண வீடுகளில் நடக்கக்கூடிய காதல் திருமணத்திற்கும், பிரபலங்களின் வீடுகளில் நடக்கக்கூடிய காதல் திருமணத்திற்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு சாதாரண வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பெண், அவள் விரும்பக் கூடிய ஆண்மகனை கல்யாணம் செய்து கொள்ள, அவரது குடும்பத்தார் மறுப்பு தெரிவிக்கும்போது, அங்கு நடக்கும் எந்த பிரச்சினையும், சலசலப்பும் வெளியே தெரியாது. அவையனைத்தும், அந்த குடும்பத்திற்குள்ளேயே இருக்கும்.