கங்குவா புது அனுபவத்தை கொடுக்கும்! இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 அன்று உலகம் முழுவதிலும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 அன்று உலகம் முழுவதிலும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. சூர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. கமலின் விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள கங்குவா படம் வர உள்ளது. இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா ஆகியோர் பிஹைண்ட்வுட்ஸ் யுட்யூப் சேனலிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.
அதிக நாள் படப்பிடிப்பு
கங்குவா படம் குறித்தான அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பத்திருந்தது. ஆனால் கரோனா காரணமாக தள்ளிபோய் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு அதிக நாள் நடந்துள்ளதாக தயாரிப்பாளர் கே. இ. ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எதுவுமே திட்டமிட்டப்படி நடப்பதில்லை. படத்திற்கான பட்ஜெட் அதிகமாகும் போதே சூர்யாவும் என்னை எச்சரித்தார். இயக்குனரும் எச்சரித்தார். இந்நிலையில் வேட்டையன் படம் வெளியாகும் தேதி சரியாக முடிவாகாத காரணத்தால் கங்குவா முதலில் தீபாவளிக்கு ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் கங்குவா தனி எதிர்ப்பார்ப்பை பெற வேண்டும் என இந்த ரிலீஸ் தேதியை முடிவு செய்ததாக கூறினார்.
இப்படத்திற்கு முதலில் வேறு இசையமைப்பாளர் முடிவு செய்யபட்டாரா என்ற கேள்விக்கு, படம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே தேவி ஸ்ரீ பிரசாத் தான் எங்கள் தேர்வு எனவும் தெரிவித்தார். தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்தநாள் அன்று இயக்குனர் சிறுத்தை சிவா அவரது வீட்டிற்கு சென்று இந்த படம் குறித்தான தகவலை தெரிவித்ததாக கூறினார்.
கங்குவா புது அனுபவத்தை கொடுக்கும்
மேலும் படத்தின் வசூல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த சிறுத்தை சிவா, படம் அனைவரையும் சந்தோஷப் படுத்தும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும். பழங்குடியினரின் வாழ்வியலை குறித்தான வரலாற்று படமாக இருக்கிறது. மேலும் இரு வேறு கால கட்டங்களில் நடைபெற்ற சமபவங்களை படம் கூறுகிறது. மக்களுக்கு படம் மிகவும் பிடிக்கும். எனவே வசூலும் எதிறப்பார்க்கு அளவை விட அதிகமாகவே வரும் எனவும் கூறினார். இறைவன் அருளால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். இந்த படத்தில் உள்ள ஞானவேல், சூர்யா ஆகிய அனைவருக்கும் இது சந்தோஷத்தை கொடுக்கு எனக் கூறினார்.
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் மொத்தம் 38 மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்காக ஏஐ தொழில்நுட்பம் மூலம் சூர்யாவின் குரலை அனைத்து மொழிகளுக்கும் பேசுமாறு உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்று பின்னணி கொண்ட இந்த படம் பிரம்மாண்டமாக உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இப்படம் முழுமையாக 2 மணி நேரம் 26 நிமிடங்கள் உள்ளது.
டாபிக்ஸ்