STR: நாம சும்மா இருந்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குதே... குழம்பத்தில் சிம்பு... புலம்பும் ரசிகர்கள்-actor simbu fans worried about his movie getting delayed - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Str: நாம சும்மா இருந்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குதே... குழம்பத்தில் சிம்பு... புலம்பும் ரசிகர்கள்

STR: நாம சும்மா இருந்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குதே... குழம்பத்தில் சிம்பு... புலம்பும் ரசிகர்கள்

Malavica Natarajan HT Tamil
Sep 28, 2024 10:11 AM IST

STR: நடிகர் சிம்பு திரைத்துறையில் தன் மீது வைத்திருந்த விமர்சனங்களைக் கடந்து தனது 2வது இன்னிங்க்ஸை தொடங்கலாம் என நினைத்தால், அது தொடர்ந்து தாமதமாகிக் கொண்ட வருகிறது. இதனால், என்ன செய்யலாம் என சிம்பு குழப்பத்தில் இருக்க அவரது ரசிகர்கள் இவருக்கா இப்படி என புலம்புகிறார்கள்.

STR: நாம சும்மா இருந்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குதே... குழம்பத்தில் சிம்பு... புலம்பும் ரசிகர்கள்
STR: நாம சும்மா இருந்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குதே... குழம்பத்தில் சிம்பு... புலம்பும் ரசிகர்கள்

இருப்பினும், காதல் விவகாரம், சூட்டிங்கிற்கு தாமதமாக வருவது, பிட்னஸ் இல்லாமல் இருப்பது என பல புகார்களில் சிக்கி வந்த சிம்பு, தற்போது அவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற முடிவில் களமிறங்கியுள்ளார். இதற்காக அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய முழு முயற்சியையும் அளிக்க நினைத்தார்.

ஆனால், அவர் ஒப்பந்தமான படம் எடுக்க தொடர்ந்து தாமதமாகி வருவதால், அடுத்தக்கட்ட முயற்சியாக என்ன செய்யலாம் என அவர் யோசித்து வருகிறார். அதேசமயம், இவரது நிலை கண்ட ரசிகர்கள், இவருக்கா இந்த நிலை என புலம்பி வருகின்றனர்.

ரசிகர்கள் மனம் கவர்ந்த சிம்பு

தமிழ் சினிமாவின் ஆல் டவுண்டரான டி.ஆர்.ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்பு சிறு வயதிலேயே தந்தையின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது வசன உச்சரிப்பால் மக்கள் மனங்களை கவர்ந்தவர். பின், காதல் அழிவதில்லை, குத்து, கோவில், சரவணா, சிலம்பாட்டம், போடாபோடி, வல்லவன், மன்மதன், ஒஸ்தி, வானம், வின்னைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம் என பல திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

சினிமாவில் தொடர்ந்த பிரச்சனை

இதற்கிடையில், சிம்பு நடிகைகளுடன் காதல் வலையில் விழுவது, திரைப்பட படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, தயாரிப்பாளர்களுடன் பிரச்சனை என பல புகார்களில் சிக்கி வந்தார்.

இது இப்படி இருக்க, உடலை சரியாக கவனித்துக் கொள்ளாமல் ஆரோக்யத்திலும் அக்கறையற்று சில காலம் சுற்றி வந்தார். இதனால், பல இயக்குநர்கள் இவருடன் இணைந்து படம் எடுக்கவே தயங்கி வந்தனர்.

ரீ எண்ட்ரிக்கு ஆசைப்பட்ட நடிகர்

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிம்பு, மீண்டும் பழைய பிட்னஸ்ஸிற்கு வந்து சினிமாவற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து இவர் நடித்த மாநாடு திரைப்படும் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியது.

பின், இயக்குநர் மணிரத்னம்- நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடத்து வந்த அவர், படப்பிடிப்பை முடித்து, தனது டப்பிங்கையும் நிறைவு செய்தார்.

இந்நிலையில், அவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். அதில், தமிழில் மெகா ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார். மேலும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பால் குஷியில் இருந்த சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

வழக்கமாக சிம்பு தான் சூட்டிங்கிற்கு தாமதமாக வருவார் என செய்திகள் வெளியான நிலையில், தனது 2ம் இன்னிங்க்ஸிற்காக காத்திருந்த சிம்புவிற்கே இப்போது சற்று அதிர்ச்சி காத்திருந்தது.

லேட்டாகும் திரைப்படம்

அதாவது, தேசிங்கு பெரியசாமி- சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை மிகவும் தரமாக வழங்க வேண்டும் என்பதில் இயக்குநர் தீவிரமாக உள்ளார்., இதனால், மொத்தப் பணிகளையும் முடித்த பின்னரே படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளாராம். இதனால், இந்தப் படத்தின் வேலைகள் இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது.

புதிய படத்தில் ஒப்பந்தம்

இதனால், அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த சிம்பு, ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறாராம். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக நிலையில், நாம தூரமாக நின்னு வேடிக்கை பார்த்தாலும் துயரம் சுத்தி சுத்தி அடிக்குதே என சிம்புவைப் பார்த்து அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

நிலமை இப்படி இருக்க, சிம்பு மீண்டும் நடிகை ஒருவருடன் காதல் வலையில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.