Singer Suchitra:“சூர்யா மேல நான் வச்ச காதல்..அவரோட கண்கள்னா எனக்கு உசுரு;மாப்பிள்ளை கேட்டு போனா சிவகுமார்..” - சுசித்ரா!
Singer Suchitra: என் கண்கள் அவரை ரசித்துக்கொண்டே இருந்தது. என்னுடைய கண்களில் ரொமான்ஸ் வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது என்பதுதான் உண்மை. அதை மணிரத்னம் சரியாக கண்டுபிடித்து விட்டார். - சுசித்ரா!

நடிகர் சூர்யா மீது தனக்கு இருந்த ஒருதலை காதல் குறித்து பிரபல பாடகி சுசித்ரா ரெட் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த சில நாட்களுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.
திட்டித்தீர்த்த மணிரத்னம்
இது குறித்து அவர் பேசும் போது “ ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ செய்து அடுத்த ஜென்மத்திலாது இவர் நமக்கு புருஷனாக வரவேண்டும் என்று நினைத்த நபர் யார் என்றால், அது நடிகர் சூர்யா தான். ஆம், நானும் அவரும் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது மணிரத்னம் நான் சூர்யாவை ரசித்துக் கொண்டிருப்பதை பார்த்து, திட்டிக் கொண்டே இருப்பார்.
அந்தப்படத்தில் வரும் ஒரு சீனில், அவர் தீப்பிடித்தவர் போல பேசிக் கொண்டிருப்பார். பின்னால் இருக்கும் நாங்கள் மிகவும் மன அழுத்தத்தோடு இருப்பது போன்று ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். ஆனால் சூர்யாவை முன்னால் வைத்துக்கொண்டு என்னால் அப்படி இருக்க முடியவில்லை.