Samsara Sangeetham: குழந்தை நட்சத்திரமாக “ஐ ஏம் ஏ சூப்பர் ஸ்டார்” என பாடிய சிம்பு! டி.ஆரின் சிறந்த பேமிலி படம்
கணவன் - மனைவி உறவு குறித்து கதையம்சத்தில் டி.ஆரின் சிறந்த பேமிலி படமாக இருக்கும் சம்சார சங்கீதம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக “ஐ ஏம் ஏ சூப்பர் ஸ்டார்” என சிம்பு பாடிய பாடல் சூப்பர் ஹிட்டானது.

“ஐ ஏம் ஏ சூப்பர் ஸ்டார்” என பாடிய சிம்பு, டி.ஆரின் சிறந்த பேமிலி படம்
தமிழ் சினிமாவில் 80ஸ்களில் டாப் இயக்குநராக வலம் வந்த டி.ராஜேந்தர் இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான பேமிலி டிராமா திரைப்படம் சம்சார சங்கீதம். நடிகை ரேணுகா ஹீரோயினாக அறிமுகமானது இந்த படத்தில் தான்.
வழக்கமாக தனது படங்களில் இயக்கத்துடன் நடிப்பது தொடங்கி, கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் என அனைத்துத்துறைகளையும் ஒருவராகவே நிர்வகித்து பிளாக் பஸ்டர் வெற்றிகளை கொடுப்பவராக இருந்து வந்தார் டி. ராஜேந்தர். இந்த படத்திலும் மேற்கூறிய அனைத்தையும் அவர் ஒற்றை ஆளாகவே கவனித்து கொண்டார்.
அத்துடன் இந்த படத்தில் தான் லிட்டில் சூப்பர் ஸ்டாராக நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் புகழடைந்தார்.