Sasikumar: 'அது நம்ம லைஃபையே மாத்தும்.. இதை மட்டும் செய்யவே கூடாது'-சசிகுமார் பகிர்ந்த அனுபவம்
டைரக்டர் ஆகணும்னா என்ன பண்ணனும். அசிஸ்டென்ட்டா இருக்கனுமா, இதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், டைரக்டரா ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். ஒவ்வொருத்தருத்தவங்க ஒவ்வொரு விஷயத்தை சொல்லும்போது நான் டைரக்டர் அப்படின்றது ஸ்கூல்ல எல்லாருக்குமே தெரியும். அப்ப டைரக்டர்னு தான் கூப்பிடுவாங்க.

‘சும்மாவாவது வீட்ல உட்கார்ந்துக்கலாம். கடன் மட்டும் வாங்கக் கூடாது. அது நம்ம லைஃபையே மாத்தும்’ என திரைப்பட இயக்குநர் சசிகுமார் கூறியுள்ளார். மேலும், தனது கல்வி, கல்லூரி வாழ்க்கை, இயக்குநர் பாலாவுடன் சேது படத்தில் இணைந்து பணியாற்றியது என அனைத்து அனுபவங்களையும் அவர் பகிரந்து கொண்டார். எஸ்எஸ் மியூசிக் யூ-டியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது: ஸ்கூல் படிக்கும்போது தான் ஃபர்ஸ்ட் இயக்குநர் ஆகனும்னு தாட் வந்தது. நான் படிச்சது கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கூல். போர்டிங் ஸ்கூல்.
எல்லாமே ஹாஸ்டல். அப்ப வீக் எண்ட்ல ஈவினிங் ரெண்டு நாள் வந்து படம் இருக்கும். ஒரு இங்கிலீஷ் படம் ஒரு தமிழ் படம் அப்படி இருக்கும்.
இயக்குநர் ஆசை எப்படி வந்தது?
அந்த படங்கள் பார்க்கும்போது இயக்குநர் ஆசை வந்தது. இவங்க எல்லாம் நடிக்கிறாங்களே இவங்க எல்லாம் யாரு, இது பண்றது இவங்களை கேக்குறது ஒரு இயக்குனர். அவர்தான் சொல்லிக் கொடுப்பாங்க. அப்படின்னு அப்புறம் ஸ்கூல்ல நாடகம் போடுவாங்க. டிராமாஸ் இதெல்லாம் போடும்போது அதுவும் பிகைன் தி ஸ்கிரீன் நம்ம டீச்சர்ஸ் தான் இயக்குநர் மாறி இருந்து எல்லாத்தையும் சொல்லிக் கொடுப்பாங்க. பரபரப்பா இருப்பாங்க. நடிக்கறவங்க நல்லா பண்ணனும்ன்ற ஒரு பரபரப்பு இருக்கும். அந்த பரபரப்பு எனக்கு புடிச்சிருந்தது. அதை தான் பண்ணனும் அதுக்குள்ள போவோம் அப்படின்னு யோசித்து தான் இந்த சினிமா துறைக்கு வந்தேன்.