Kanaka : ‘அம்மா போனதும் அது ஒரு மாதிரி ஆயிடுச்சு.. நான் போய் கேட்டேன்..’ கனகா பற்றி ராமராஜன் சொன்ன ஷாக் தகவல்!-actor ramarajans interview about actress kanakas current situation - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanaka : ‘அம்மா போனதும் அது ஒரு மாதிரி ஆயிடுச்சு.. நான் போய் கேட்டேன்..’ கனகா பற்றி ராமராஜன் சொன்ன ஷாக் தகவல்!

Kanaka : ‘அம்மா போனதும் அது ஒரு மாதிரி ஆயிடுச்சு.. நான் போய் கேட்டேன்..’ கனகா பற்றி ராமராஜன் சொன்ன ஷாக் தகவல்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 23, 2024 11:27 AM IST

Actress Kanaka : ‘பாரதிராஜாவின் சொந்தப் படம் மருதாணி, அதில் கனகா நடிக்க வேண்டியது. ஆனால், அதில் நடிக்க கனகா மறுவிட்டார். அதன் பின் தான் கங்கை அமரன் பார்த்தார். கரகாட்டக்காரன் படத்தில் அவரை புக் பண்ணோம். அப்போ அவருடைய பெயர்..’

Kanaka : ‘அம்மா போனதும் அது ஒரு மாதிரி ஆயிடுச்சு.. நான் போய் கேட்டேன்..’ கனகா பற்றி ராமராஜன் சொன்ன ஷாக் தகவல்!
Kanaka : ‘அம்மா போனதும் அது ஒரு மாதிரி ஆயிடுச்சு.. நான் போய் கேட்டேன்..’ கனகா பற்றி ராமராஜன் சொன்ன ஷாக் தகவல்!

நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பு

‘‘கனகாவுக்கு அம்மா தான் உயிர். அப்பா விட்டுட்டு போயிட்டார். அம்மா போனதுக்கு அப்புறம், இனி நமக்கு என்ன இருக்கு என்று நினைத்தார். ஒருநாள் டப்பிங் தேர்தலுக்கு போயிருந்தேன். அப்போத ஒருத்தர் வந்து, ‘சார் உங்கள கனகா மேடம் கூப்பிடுறாங்க’ என்று கூறினார். ‘கனகாவா? எங்கே..’ என்று நான் கேட்டேன். அதை கனகாவிடம் தான் கேட்டேன். ‘சார்.. நான் தான் கனகா’ என்றார். ‘என்னம்மா வெள்ளைக்கார பொண்ணு மாதிரி இருக்க..’ என்று கேட்டேன். சிக்க செவேனு, கொஞ்சம் எடை போட்டு, முடியெல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு.

பாரதிராஜாவின் சொந்தப் படம் மருதாணி, அதில் கனகா நடிக்க வேண்டியது. ஆனால், அதில் நடிக்க கனகா மறுவிட்டார். அதன் பின் தான் கங்கை அமரன் பார்த்தார். கரகாட்டக்காரன் படத்தில் அவரை புக் பண்ணோம். அப்போ அவருடைய பெயர், ‘கனகமகாலட்சுமி’ என்று இருந்தது. நான் அமர் அண்ணனிடம் கூறினேன், ‘என்னண்ணே.. பேரு பெருசா இருக்கு.. கனகானு வெச்சிருங்க’ என்று நான் தான் கூறினேன்.

கனகாவுக்கு அம்மா தான் உயிரு. அம்மா போனதுக்கு அப்புறம் அதுக்கு ஒரு மாதிரி தான் இருந்தது. ஏதோ படத்தில நடிச்சுட்டு போயிட்டு இருந்துச்சு. அதுக்கு அப்புறம் நானும் பார்க்கல. சென்னை வருவேன், நானும் நடிகனாவேன்னு நான் நினைச்சது இல்ல. மதுரையில், தலைவர்(MGR) மேடைகளில் ஓரமா நின்னு, அவர் மேடை ஏறும் போது, அவரை லேசா தொடுவேன். அதுக்காக நிறைய அடி வாங்கியிருக்கேன். அப்படி இருந்த என்னோட கல்யாணம், அவர் தலைமையில் நடந்தது.

எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது

என் வாழ்க்கையில் அதை விட பெரிய விசயம் எதுவும் நடக்கப் போவதில்லை. அதே போல என் குழந்தைகளுக்கு அம்மா(ஜெயலலிதா) வந்து செயின் போட்டு வாழ்த்தினார். இந்த இரண்டும் என்னால் மறக்கவே முடியாது. தலைவரும் அம்மாவும் நடித்தார்கள் என்றால், அந்த படத்திற்கு போட்டி போட்டு போவோம். அப்படிப்பட்ட எனக்கு, அந்த இரு தலைவர்களும் நேரில் வாழ்த்தும் பாக்கியம் கிடைத்தது,’’

என்று அந்த பேட்டியில் ராமராஜன் கூறியிருந்தார். நடிகை கனகாவின் தோற்றம் தொடர்பாகவும், அவரின் தனிமையான வாழ்க்கை குறித்தும் பல்வேறு கிசுகிசுக்கள் தற்போது உலா வருகிறது. இந்நிலையில் கனகா பற்றி ராமராஜனின் கருத்துக்கள் கவனம் பெறுகின்றன. ஒருகாலத்தில் ஃபெர்பெக்ட் ஜோடியாக அறியப்பட்ட ராமராஜன்-கனகா ஜோடி இன்றும் ஹிட் ஜோடியாக அறியப்படுகிறது.

ராமராஜன் மட்டுமின்றி, முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ள கனகா, பல ஹிட் படங்களை கொடுத்தவர், கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கனகா, சிறந்த டான்ஸராகவும், நவரச நடிகையாகவும் அறியப்படுகிறார். அவருடைய கிராமிய நடிப்பு, கிராமத்துப் பெண்ணாகவே அவரை அடையாளப்படுத்தியது.

மேலும் பொழுதுபோக்கு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூகவலைதள பக்கங்களிலும் எங்களை பின் தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.