Karakattakaran: தமிழ் சினிமாவின் பெருமை.. தவிர்க்க முடியாத படம்.. காவியமான கரகாட்டக்காரன்..ஜொலித்த ராமராஜன்
Karakattakaran: ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டது. இந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதை 1989ம் ஆண்டு பெற்றது. இந்நிலையில் கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்கப்படும் என்ற பேச்சு திரைத்துறையில் அடிபட்டது.
Karakattakaran: கரகாட்ட கலைஞர்களின் வாழ்வியலை பேசிய படம் கரகாட்டக்காரன் வெளியாகி இன்றோடு 35 ஆண்டுகள் கடந்துள்ளது. நடிகர் ராமராஜனின் வாழ்வில் திருப்பு முனை தந்த இந்த கரகாட்டக்காரன் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
1989ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரு வெற்றி பெற்ற ஒரு படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வாகை சந்திரசேகரன், வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே பணியாற்றி இருந்தனர். அன்றை நாட்களில் சிவாஜி பத்மினியின் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வேறு வடிவமாகவே கரகாட்டக்காரன் பார்க்கப்பட்டது.
கங்கை அமரன் கதை எழுதி இயக்கி இளையராஜா இசையில் பெரும் வரவேற்பை பெற்ற படம். சபாபதி ஒளிப்பதிவு செய்ய கருமாரி கந்தசாமி, ஜெ.துரை தயாரித்தனர்.
இந்த படத்தில் கோயில் திருவிழாவில் வழக்கமாக கரகாட்டம் ஆடும் காமாட்சியை பண்ணையார் அந்த ஆண்டு தவிர்க்கிறார். வெளியூரில் இருந்து முத்தையா என்ற கரகாட்ட கும்பலை திருவிழாவில் ஆட அழைத்து வருகிறார்.
முத்தையாவுக்கும் காமாட்சிக்கும் இடையே காதலும் மோதலும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் இறுதியில் காமாட்சியின் அத்தை மகன் தான் முத்தையா என்பது தெரிய வரும். ஆனாலும் இருவரையும் பிரிக்க பண்ணையார் சதி செய்வார். பண்ணையாரின் சதியை முறியடித்து முத்தையாவும் காமாட்சியும் ஒன்று சேர்வதே படத்தின் கதை.
இத்திரைப்படம் முழுவதும் , செந்தில், கவுண்டமணி, கோவை சரளா ஆகிய 3 பேரும் காமெடியில் போட்டியிட்டு கலக்கி இருப்பார்கள். குறிப்பாக வாழைப்பழ காமெடி, அந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா, போன்றவை எவர்கிளீன் காமெடியாக இன்றும் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
கவுண்டமணி செந்தில் என்ற இரு பெரும் ஆளுமைகளை பின்னுக்கு தள்ளும் வகையில் கோவை சரளா அந்த படித்தில் தன் ஆளுமையை செலுத்தி இருப்பார். அதிலும் எந்த திருவாரூர் பார்டில கூப்டாக, தென் அமராவதி பார்டில கூப்டாக என்ற கோவை சரளாவின் தனித்துவமான அந்த காமெடி இன்றும் அடுத்தவர்களை கிண்டலடிக்க இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்த படத்தில் டைட்டில் பாடலை இளையராஜா பாடியிருந்தார். இது மனிதர்களின் ஒவ்வொரு பிறப்பு முதல் இறப்பு வரையாக ஒவ்வொரு தருணத்திலும் இளையராஜாவின் இசையிலும் பாடலிலும் உள்ள பங்கை அவர் குரலிலேயே பாடியிருப்பார்.
மாங்குயிலே பூங்குயிலே பாடல் எவர் கிரீனாக இன்று இளைஞர்கள் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. அதேபோல் இந்த மான் உந்தன் சொந்த மான் பாடல் ஆகச்சிறந்த மெலடியாக இருந்தது. இப்படி படத்தில் இருந்த ஒவ்வொரு பாட்டும் படு ஹிட். இந்த படம் மதுரையில் நடனா, நாட்டியா, நர்த்தனா திரையரங்கில் ஓராண்டுக்கும் மேலாக 425 நாட்கள் ஓடியது.
ஒரு கட்டத்தில் ஆரம்பத்தில் டூரிங் டாக்கீஸ் டிக்கெட் கொடுப்பராக தன் வாழ்க்கையை தொடங்கிய ராமராஜன் தானே அந்த தியேட்டரை வாங்கினார். இப்படி ராமராஜனின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த படம்
இந்த திரைப்படம் ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டது. இந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதை 1989ம் ஆண்டு பெற்றது.
இந்நிலையில் கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்கப்படும் என்ற பேச்சு திரைத்துறையில் அடிபட்டது. வெறும் டூரிங் டாக்கீஸில் தொடங்கிய ராமராஜனை திரையரங்க முதலாளியாக மாற்றி அழகு பார்த்த கரகாட்டக்காரன் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்