Actress Meena:என் முன்னாடியே அழுகை; அம்மா இனி நான் பாத்துக்கிறேன் -மீனா மகள் எமோஷனல் பேட்டி!
அப்பா இறந்த பிறகு அம்மா மிகவும் சோகமாக மாறிவிட்டார் எப்போதுமே மன அழுத்தத்தில் இருந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு மீனாவும் இவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு நைனிகா என்ற மகள் பிறந்தார். இவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு நுரையீரல் பாதிப்பால் காலமானார். அவரது இறப்பு குறித்து பல்வேறு தகவல்களை பல சேனல்கள் வெளியிட்டனர்.
இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான மீனா அதன் பின்னர் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தார். திரை வட்டாரத்தில் இருக்கக்கூடிய நண்பர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். இந்த நிலையில் அண்மையில் சேனல் ஒன்று இவர் திரைத்துறைக்கு வந்த 40 வது வருடத்தை கொண்டாடியது. அந்த நிகழ்ச்சில் மீனாவின் மகள் நைனிகா மிகவும் எமோஷனலாக சிலவற்றை பகிர்ந்து கொண்டார். அவை இங்கே
“அம்மா மிகவும் கடினமாக உழைப்பாளி. ஆனால் வீட்டுக்கு வந்தால் அம்மா அம்மாவாக மட்டுமே இருப்பார் அந்த இடத்தில் ஒரு கதாநாயகியாக அவர் இருக்க மாட்டார்
நான் ஒரு வெற்றிகரமான மனிதராக இருந்து உங்களை பெருமைப்படுத்துவேன். உங்களுக்கு நான் பெரியதாக ஏதாவது ஒன்றை நிச்சயம் வாங்கி தருவேன்.அது ஒரு மிகப்பெரிய வீடு என்பதை நான் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அப்பா இறந்த பிறகு அம்மா மிகவும் சோகமாக மாறிவிட்டார் எப்போதுமே மன அழுத்தத்தில் இருந்தார். அதிலிருந்து அவரை வெளியே கொண்டுவர நான் முடிந்தவரை உதவி செய்தேன். அம்மா பலமுறை என் முன்னே அழுது இருக்கிறார்கள். அதை பார்க்கும் பொழுது நானும் மிகவும் கவலைப்படுவேன். ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி இருவரும் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர முயற்சி செய்வோம்.
அந்த சமயத்தில் நான் எனது அம்மாவிற்கு பரிசு ஒன்றை கூட வாங்கி கொடுத்தேன். குழந்தையிலிருந்து நீங்கள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள்; இனி நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். நிறைய டிவி சேனல்கள் எனது அம்மாவை பற்றி தவறான தகவல்களை வெளியிடுகின்றனர். அதில் சில பிரபலமான டிவி சேனல்கள் உண்டு. தயவு செய்து இது போன்ற தகவல்களை வெளியிடாதீர்கள்; எனக்காக இதை நிறுத்திக் கொள்ளுங்கள். அம்மா ஒரு கதாநாயகி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு மனிதர் தான். அவருக்கும் உணர்வுகள் உண்டு.” என்றார்.
டாபிக்ஸ்