100 கோடிக்கே திணறும் வேட்டையன்.. கிறுகிறுக்கும் லைகா.. 12ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் ரஜினி காந்த்தின் வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகி 12 நாட்கள் ஆன பின்னும் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலை பெறாமல் தள்ளாடி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்து வெளியான வேட்டையன் திரைப்படம் வெளியாகி 12ஆவது நாளில் இந்தியா முழுவதும் ரூ.2.05 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது.
வேட்டையன் வசூல் எவ்வளவு
வேட்டையன் திரைப்படம் வெளியான 12ம் நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 2.05 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 99.6 கோடி ரூபாயும், இந்திய அளவில் 137.27 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. இந்தப் படம் வெளியாகி 12 நாட்களைக் கடந்தும் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாயை இன்னும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
வழக்கமாக ரஜினி படம் வெளியான சில நாட்களிலேயே படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை எகிறவிடும். ஆனால், தற்போது படம் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் 100 கோடியே தாண்டாமல் உள்ளதற்கு மிகப் பெரிய காரணமாக இருப்பது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயான போட்டி தான் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
