‘புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி.. திசு பொறியியல் நுட்பம்’ நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் கருத்து!
திசு பொறியியல் ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை நுட்பம் ஆகும் என நிபுணர்கள் மற்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: திசு பொறியியல் என்பது வரும் காலங்களில் ஒரு புரட்சிகரமான புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு செலவு செய்வது என்பது அவரது மொத்த சொத்துக்களையும் இழக்கும் நிலையில் உள்ளது. புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் திசு பொறியியல் ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாக உருவாகி வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். மேலும் பயனுள்ள, மலிவான கட்டணத்தில் மற்றும் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட சிகிச்சைகளுக்கு, திசு பொறியியல் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
புற்றுநோயியல் துறையில், துல்லியமான திசு மீளுருவாக்கம் மற்றும் மாற்றத்தை செயல்படுத்துவதன் மூலம், உலகளாவிய நோயாளிகளுக்கு கவனிப்பு மற்றும் அணுகல் ஆகியவற்றை மறுவரையறை செய்வதில் முக்கிய சவால்களை சமாளிக்க முடியும் என்று புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கருதுகின்றனர்.
திசுப்பொறியியல் என்பது என்ன?:
சமீபத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆய்வாளரும் விஞ்ஞானியுமான ராஜா விஜயகுமார், “திசுப் பொறியியல் என்பது உயிரியல் திசுக்களில் கட்டுப்படுத்தப்பட்ட மீளுருவாக்கம் செய்வதை மாற்றுவது, மாற்றியமைப்பது மற்றும் தூண்டுவது ஆகியவற்றைப் பற்றியது.
இது புற்றுநோய், மூட்டுவலி மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது”எனத் தெரிவித்தார்.
இதைக் கருத்திற்கொண்டு, அயனியாக்கம் செய்யாத, வெப்பமற்ற கதிர்வீச்சு சிகிச்சைக்காக வேகமான ரேடியோ பர்ஸ்ட்களை (FRBs) பயன்படுத்தி, சைட்டோட்ரான் எனப்படும் மருத்துவ சாதனத்தை குமார் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இது திசு மீளுருவாக்கம் மற்றும் பழுதுபார்க்க உதவுகிறது. மேலும், புற்றுநோய் செல்கள் உட்பட இலக்கு செல்களில் மைட்டோசிஸ் வளர்ச்சியை நிறுத்துகிறது அல்லது புற்றுநோய் செல்கள் என்னும் இலக்கு செல்களில் மைட்டோசிஸ் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
"புற்றுநோய் சிகிச்சைக்காக, கிரிப்டான், அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சைட்டோட்ரான் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுள்ளது. தீங்கு விளைவிக்கும் திசுக்களுக்கு, ஆரோக்கியமான இலக்கு தீர்வுகளை வழங்குகிறது.
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மாற்றியமைத்து, இந்த தொழில்நுட்பத்தை மில்லியன் கணக்கானவர்களுக்கு அணுகுவதே எங்கள் நோக்கம்," என்று விஞ்ஞானி ராஜா விஜயகுமார் கூறினார்.
புற்றுநோய்க்கான வழக்கமான சிகிச்சையின் வரம்புகளை டாக்டர் லிம் இயூ செங், ஆலோசகர் கார்டியோடோராசிக் சர்ஜன், கோலாலம்பூர், மலேசியாவில் இருந்து எடுத்துக் கூறினார்.
கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையின் பக்க விளைவுகள்:
அதன்படி,"புற்றுநோய்க்கு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளன. அவற்றை நாம் கவனிக்க வேண்டும். மேம்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவர்களை மற்றும் மருத்துவமனைகளைத் தொடர்புகொள்ளும் வசதி சில பகுதிகளில் குறைவாக உள்ளது. குறிப்பாக, வழக்கமான சிகிச்சைகள் செய்வதற்கே வசதிகள் குறைவாக உள்ளன.
கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை கடுமையான பக்கவிளைவுகளுடன் வருகின்றன. இலக்கு வைக்கப்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஆக்கிரமிப்பு அல்லாத புற்றுநோய் சிகிச்சைகளுக்கான அழுத்தமான தேவை உள்ளது. இதனால்தான் திசு பொறியியலுக்கு, தற்போதைய புற்றுநோயியல் துறையில் மாற்றும் திறன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். திசுக்களை மாற்றியமைத்து மீளுருவாக்கம் செய்வதன் மூலம், இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, செல்லுலார் அளவிலான தலையீட்டை வழங்குகிறது. இது நச்சுத்தன்மையைக் குறைக்கும் மற்றும் விளைவுகளை மேம்படுத்தும். இது பாரம்பரிய மருந்து அணுகுமுறைகளுக்கு அப்பால் நம்மை நகர்த்தும் ஒரு புதிய முன்னுதாரணமாகும்" என டாக்டர் லிம் இயூ செங் தெரிவிக்கிறார்.
இவ்வாறு திசு பொறியியலின் முக்கியத்துவத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டாபிக்ஸ்