தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  21 Years Of Dhanush: நடிப்பின் அரக்கன்.. தனுஷ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து 21 வருடம் நிறைவு

21 Years Of Dhanush: நடிப்பின் அரக்கன்.. தனுஷ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து 21 வருடம் நிறைவு

Aarthi V HT Tamil
May 10, 2023 10:59 AM IST

நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தனுஷ்
தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் இந்த படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த கஸ்தூரி ராஜாவின் குடும்பத்தை மீட்டு எடுக்க உருவானது துள்ளுவதோ இளமை. இந்த படத்தை இயக்கியது செல்வராகவனாக இருந்தாலும், வியாபாரத்திற்காக கஸ்தூரி ராஜாவின் பெயர் டைட்டில் கார்டில் இடம் பெற்றது. படம் வெளியான போது எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்தன.

19 வயதில் சினிமாவில் நுழைந்தார் தனுஷுக்கு முதிர்ந்த தோற்றம் இல்லை என்று பலர் நினைத்ததால் அவர் நிறைய விமர்சனங்களைக் கேட்க வேண்டியிருந்தது. சினிமாவில் அவர் நடித்த நாட்களில், அவருக்கு ஹீரோவுக்கான முகம் இல்லை என விமர்சனம் செய்யப்பட்டது. "இந்த மூஞ்சி எல்லாம் எங்க ஹீரோவாக போகிறது" என அவர் முகம் முன்பே பலரும் சொன்னார்கள்.

இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி தனது கடின உழைப்பாலும், உறுதியாலும், ஹீரோக்கள் எல்லா வடிவங்களிலும், அளவிலும் வருகிறார்கள் என்பதை தனுஷ் நிரூபித்தார். இளம் நடிகரின் விடாமுயற்சி பின்னாளில் அவரை முன்னணி நடிகராக மாற்றியது.

பன்முகத் திறமை

தனுஷ் தனது திரைப்படங்களுக்கான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் எப்போதும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்யவே விருப்பம் தெரிவித்தார்.

அது ஃபாக்ஸ் ஆபிஸில் தோல்விகளை சந்தித்தாலும் நிமிர்ந்து நின்று வித்தியாசமான படங்களில் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கிறார். நடிகராக மற்றும் தான் நின்றுவிட கூடாது என எண்ணி அவர் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக மாறி தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

தனுஷ் - வெற்றிமாறன் காம்போ

சினிமாவில் ஒரு இயக்குநர் - நடிகர் இரண்டு படங்கள் சேர்ந்து செய்தாலே போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடும். அவர்களுக்கு மத்தியில் வெற்றி மாறன் - தனுஷ் காம்போ 4 படங்களில் ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் இணைந்த செய்த படங்கள் எல்லாமே வெற்றி பெற்று இருக்கிறது.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என சூப்பர் ஹிட் நான்கு படங்கள் கொடுத்தனர். தனுஷ் இரண்டு முறை வெற்றிமாறன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை வென்றி இருக்கிறார்.

பாலிவுட் பயணம்

கோலிவுட்டில் ஒரு பயங்கரமான வெற்றிக்குப் பிறகு, தனுஷ் பாலிவுட்டில் தனது முத்திரையை விரிவுபடுத்தினார். இது தனுஷை ஒரு இந்திய நட்சத்திரமாக மாற்றியது.

ஹாலிவுட் பயணம்

தனுஷின் 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் உலகளவில் வசூல் சாதனை படைத்தது அது அவருக்கும் பெரும் புகழைப் பெற்று கொடுத்தது. தனுஷ் இறுதியாக 2018 ஆம் ஆண்டு 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலக அரங்கில் தனுஷின் வெற்றி அவரை கோலிவுட் மற்றும் இந்திய சினிமாவின் பெருமையாக மாற்றியது.

நடிப்பின் அசுரன்

ஒரு காலத்தில் தூற்றப்பட்ட இந்த நடிகரை தான் இன்று நடிப்பின் அசுரன், நடிப்பின் அரக்கன் என அன்போடு அழைத்து வருகிறார்கள் மக்கள். நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்