மீண்டும் அந்தர் பல்டி.. மஞ்சள் வீரன் ஹீரோ கூல் சுரேஷ் இல்லை? டிமிக்கி கொடுத்த டைரக்டர்!
மஞ்சள் வீரன் படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவலில் உண்மை இல்லை என பல நாட்கள் கழித்து விளக்கமளித்துள்ளார் இயக்குநர் செந்தில் செல்அம்.

நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகராக இருப்பவர் கூல் சுரேஷ். இவர் காமெடியன் மற்றும் வில்லனாக சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்சசியில் பங்கேற்றுள்ளார். பட விழாக்களில் இவரின் நடவடிக்கைகள் மற்றவரை திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல சம்பவங்களை செய்து வருவார்.
கதாநாயகனாகும் கூல் சுரேஷ்
இவரின் இந்த செயல்களினால், தமிழ்நாட்டில் கூல் சுரேஷை தெரியாதவர்களே இருக்க முடியாது என கூறும் நிலை உள்ளது. இப்படி இருக்கும் நிலையில், கூல் சுரேஷ் இயக்குநர் செந்தில் செல்அத்தின் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் எனத் தெரிவித்து கடந்த மாதம் புகைப்படங்களும், வீடியோவும் வெளியானது.
மறுப்பு தெரிவிக்கும் செல்அம்
இந்தத் தகவலை கூல் சுரேஷும் ஒப்புக்கொண்ட நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பின் இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்அம்.
