Vidaamuyarchi: பொறுத்தது போதும்... வந்தது விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட்… டிரீட் கொடுத்த அர்ஜூன்
Vidaamuyarchi: நடிகர் அஜித்- இயக்குநர் மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் விடாமுயற்சி திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து அசத்தல் அப்டேட் அளித்துள்ளார் நடிகர் அர்ஜூன். இதனால், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திற்கு பின் அவரது அடுத்த திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து நடிகர் அர்ஜூன் அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார்.
இயக்குநர் மகிழ்திருமேனி- நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், திரிஷா, அர்ஜூன், ரெஜினா காசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரச்சனையால் நின்ற படப்பிடிப்பு
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்படாமலே இருந்தது. பின்னர், படக்குழு போஸ்டர்கள் மட்டும் வெளியிட்டு வந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த வீடியோவை ஆரவ் சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். இதன்பின், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.