Top 10 Cinema News: D52 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் வேட்டையன் புதிய வீடியோ வெளியீடு வரை-டாப் 10 சினிமா நியூஸ்-dhanushs next film announced vettaiyan new video released and other top 10 cinema news on 17th september 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: D52 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் வேட்டையன் புதிய வீடியோ வெளியீடு வரை-டாப் 10 சினிமா நியூஸ்

Top 10 Cinema News: D52 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் வேட்டையன் புதிய வீடியோ வெளியீடு வரை-டாப் 10 சினிமா நியூஸ்

Karthikeyan S HT Tamil
Sep 17, 2024 08:35 PM IST

Top 10 Cinema News: தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு, 'சில்லாஞ்சிருக்கியே' வீடியோ பாடல் ரிலீஸ், மஞ்சு வாரியர் அறிமுக வீடியோ வெளியீடு உள்பட டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Top 10 Cinema News: D52 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் வேட்டையன் புதிய வீடியோ வெளியீடு வரை-டாப் 10 சினிமா நியூஸ்
Top 10 Cinema News: D52 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் வேட்டையன் புதிய வீடியோ வெளியீடு வரை-டாப் 10 சினிமா நியூஸ்

ரூ.30 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு

நடிகர் பிருத்விராஜ் மும்பையில் ரூ.30 கோடி மதிப்பிலான இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.

'சில்லாஞ்சிருக்கியே' வீடியோ பாடல் ரிலீஸ்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 'லப்பர் பந்து' படத்தின் 'சில்லாஞ்சிருக்கியே' என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சார் படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை நாளை வெளியாக உள்ளது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.

'வாழை' வெற்றி விழாவில் மாரி செல்வராஜ்

விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்பதை என்னைவிட தப்பித்தவர்கள் சொல்கிறார்கள் என்பதே மிகப்பெரிய சந்தோசம். விபத்தில் சிக்கியவர்களை ஜாதி, மதம் பார்க்காமல் காப்பாற்றிய அத்தனை மக்களுக்கும் இந்த மேடையில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று வாழை வெற்றி விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

பிரதமருக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்." என ரஜினி தெரிவித்துள்ளார்.

புதிய படத்தின் டைட்டில் எப்போது?

தன்னுடைய புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

டிமான்ட்டி காலனி 2 படத்தின் ஓடிடி தேதி வெளியானது

டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.

தி கோட் வசூல் எவ்வளவு?

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியான ‘கோட்’ திரைப்படம் உலகளவில் 400 வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மொத்த வசூலான 414. 43 கோடி சாதனையை முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சு வாரியர் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.