கடவுளே.. விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முக்கிய அப்டேட்!.. இனி சம்பவம் தான்! குஷியான ரசிகர்கள்
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடவுளே.. விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முக்கிய அப்டேட்!.. இனி சம்பவம் தான்! குஷியான ரசிகர்கள்
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திற்கு பின் அவரது அடுத்த திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி- நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், திரிஷா, அர்ஜூன், ரெஜினா காசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டீசர் அறிவிப்பு
இந்தப் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில குளறுபடிகளால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.