குட் பேட் அக்லி காட்சிகள் லீக், வேட்டையன் படக்குழு புதிய முயற்சி, சீரியல் நடிகை திருமணம்..டாப் சினிமா செய்திகள் இன்று
குட் பேட் அக்லி காட்சிகள் லீக், வேட்டையன் படக்குழு புதிய முயற்சி, சீரியல் நடிகை திருமணம் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்ற பார்க்கலாம்.

இந்த வாரம் வேட்டையன், பிளாக் உள்பட இரண்டு தமிழ் படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.
சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த ஹீரோயின்கள்
கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படத்தின் ஹீரோயின்களான மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்க தொடங்கியிருக்கும் நிலையில் இரு நடிகைகளும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். தங்கலான் போல் இந்த படத்திலும் மாளவிகா சண்டை காட்சிகளில் தோன்றவுள்ளார்.
5 இசையமைப்பாளர்களுடன் உருவாகும் படம்
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃப்ர்ஹானா படங்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் வெங்கடசேன் இயக்கும் புதிய படம் டிஎன்ஏ. அத்ர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள். படத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான், ஜெயந்தி அம்பேத்குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்