கூண்டில் ஏற்றப்பட்ட அபிராமி.. கார்த்திக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கூண்டில் ஏற்றப்பட்ட அபிராமி.. கார்த்திக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்ப்போம்.

கூண்டில் ஏற்றப்பட்ட அபிராமி குறித்தும், கார்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்தும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய எபிசோட்:
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்திக் அபிராமியை வெளியே எடுக்க முயற்சி செய்ய இது வரதட்சணை கேஸ் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கின்றனர். அதன் பிறகு வக்கீலை வைத்துப் பேச அப்போதும் இது ரொம்ப சீரியசான கேஸ், எங்களால் எதுவும் பண்ண முடியாது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கோங்க என ஷாக் கொடுக்கின்றனர்.