khushbu: இவன் எல்லாம் மனுஷனே இல்லை... சுயநலவாதி... பூமராங் திரும்பத் தாக்கும்... சூடான குஷ்பு-who is a man actress khushbu post goes viral - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Khushbu: இவன் எல்லாம் மனுஷனே இல்லை... சுயநலவாதி... பூமராங் திரும்பத் தாக்கும்... சூடான குஷ்பு

khushbu: இவன் எல்லாம் மனுஷனே இல்லை... சுயநலவாதி... பூமராங் திரும்பத் தாக்கும்... சூடான குஷ்பு

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 09:44 AM IST

khushbu: தன் குழந்தைகளை அன்புடன் பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவனே நல்ல மனிதன். அவர்களை விட்டுச் செல்பவன் உண்மையான மனிதனே அல்ல என நடிகை குஷ்பு காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். இவர் யாரைக் குறித்து பேசுகிறார் என மக்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.

khushbu: இவன் எல்லாம் மனிதனே இல்லை... சுயநலவாதி... பூமராங் திரும்பத் தாக்கும்... சூடான குஷ்பு
khushbu: இவன் எல்லாம் மனிதனே இல்லை... சுயநலவாதி... பூமராங் திரும்பத் தாக்கும்... சூடான குஷ்பு

உண்மையான மனிதன்

அதில், தன் குடும்பத்தை மதித்து போற்றி நடந்து கொள்பவனே உண்மையான மனிதன். அவனது தனிப்பட்ட தேவைகள், ஆசைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். வாழ்வின் முக்கிய அங்கமான திருமணத்தில் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்காக குடும்பத்தை விட்டு விலகி, தனது உரிமையிலிருந்து விலகி நிற்கக் கூடாது.

மனிதன் அல்ல சுயநலவாதிகள்

திருமண பந்தத்தில் உள்ள அன்பு காலப்போக்கில் குறையலாம். ஆனால், கணவன் மனைவிக்கு உண்டான பரஸ்பர மரியாதை என்றும் குறையக் கூடாது. தனது குழந்தையை அன்புடன் பார்த்து வளர்க்கும் மனைவியை மதிப்பவனே உண்மையான மனிதன். அப்படி இல்லாமல் மனைவி, குழந்தைகளை பிரிந்து செல்பவன் உண்மையான மனிதனே அல்ல. இதனால், குழந்தைகள் எந்தளவு பாதிப்புகளை சந்திப்பார்கள் என்பதை அறியாத இவர்கள் சுயநலவாதிகள் தான். இவர்களக்கு மனித நேயமும் இல்லை, குடும்ப வாழ்க்கையில் சரியான புரிதலும் இல்லை. அதனால் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர்.

பூமராங் போல் திரும்பத் தாக்கும்

வாழ்க்கை மிக அழகான சக்கரம். இதில் சிலர் சுயநலத்தால் செய்யும் தவறுகள் பூமராங்கைப் போல் திரும்ப வந்து உங்களையே தாக்கும். ஆனால், அவற்றை நீங்கள் உணரும் காலத்தில் உங்கள் காலம் கடந்திருக்கும். இது கசப்பான உண்மை தான்.

மனைவியை மதிப்பது என்பது சிறப்பான குணம் அல்ல. அது மனிதனுக்கு தேவையான அடிப்படை குணம். இதை அறியாதவர்கள் பிறரிடமிருந்து மரியாதையை எதிர்பார்ப்பது என்பது சாத்தியமற்றது.

இதுதான் துணை

அளவுகடந்த நேசத்தை வழங்கிவரும் மனைவியை அவமதிப்பதிலேயே உங்களின் குணம் தெரிந்து விடுகிறது. அது உங்கள் துணையின் இதயத்தை நொறுங்கச் செய்யும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவன் முதலில் குடும்பத்தைத் தான் முன்னேற்றுவான். வாழ்வின் எல்லா நாட்களும் சந்தோஷத்தால் நிரம்பி இருக்காது. பரஸ்பரமும் மரியாதையும் உள்ள இடத்தில் கடினமான நாட்களில் நம்பிக்கை துணையாக நிற்கும்.

இங்கிருந்து ஆரம்பியுங்கள்

அன்பு மட்டுமல்ல, சமரசம் செய்துகொள்ளாத மரியாதையை அளித்தால் மட்டும் தான் காலத்தால் அழியாத உறவு கிடைக்கும். இதை அனைவரும் அவர்களது வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இந்த உண்மைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளாத நபர் அன்பின் பாதையிலிருந்தும், நிறைவான வாழ்விலிருந்து விலகியே போவார் என குஷ்பு உணர்வுப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த பதிவை கண்ட இவரது பின்தொடர்பாளர்கள் யாருக்காக இந்த பதிவை அவர் பதிவு செய்துள்ளார். இவருக்கும் இவரது காதல் கணவரான நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி-க்கும் ஏதேனும் பிரச்சனையா? அல்லது சமீப காலமாக திரையுலக தம்பதிகள் பலரும் குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிந்து சென்று வருவது அதிகரித்துள்ளதால் இந்த பதிவை அவர் பதிவிட்டுள்ளாரா என பல குழப்பத்தில் உள்ளனர்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.