Sivakumar: இளையராஜா எனும் ராகதேவன்.. காற்று வாங்கிய தியேட்டர்.. - ஆட்டிப்படைத்த அன்னக்கிளி திரைப்பட பின்னணிக்கதை!
அன்னக்கிளி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்களை சிவகுமார் பகிர்ந்திருக்கிறார்.

சிவகுமார் பேச்சு
சிவகுமார் பேசும் போது “1950 களிலேயே ஏ எல் சீனிவாசன் பல திரைப்படங்களை தயாரித்து வந்தார். அந்த வரிசையில் “கந்தன் கருணை” திரைப்படத்தையும் தயாரித்தார். அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 34 பேரை ஆடிஷன் செய்தார்கள்.
ஆனால் யாருமே திருப்தியாக அமையவில்லை. இதனையடுத்து தான் அந்த படத்தில் என்னை கமிட் செய்தார்கள். 35 வது நான் அதில் நடித்தேன். இப்போது வரை அந்த முருகன் கதாபாத்திரத்தில் யாராலும் அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்க முடியாது. ஏன் இப்போது இருக்கக்கூடிய சூர்யா, கார்த்தியால் கூட அப்படி நடிக்க முடியாது.
பஞ்சு அண்ணனின் அன்னக்கிளி படத்தில் இளையராஜா அறிமுகமாகும் பொழுது அதில் உள்ள பாடல்கள் அனைத்தையும் வெளிப்புறங்களில் ஷூட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.