Bayilvan ranganathan: ஜோதிகா சிவகுமார் மோதல்.. மும்பையில் தனி பங்களா.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்!
Bayilvan ranganathan: சூர்யா, ஜோதிகா, சிவகுமார் இடையே நடக்கும் பிரச்சினைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனியார் சேனல் ஒன்றிற்கு பேசி இருக்கிறார்.
(1 / 4)
சூர்யா, ஜோதிகா, சிவகுமார் இடையே நடக்கும் பிரச்சினைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் தனியார் சேனல் ஒன்றிற்கு பேசி இருக்கிறார்.இது குறித்து அவர் பேசும் போது, "பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிவகுமார். பல நடிகைகளுடன் ஒன்றாக நடித்தாலும், கிசுகிசுக்களை தன் பக்கம் அண்ட விடாதவர் என்று இவருக்கு ஒரு பெயர் உண்டு. திரைத்துறையில் இருந்தாலும், இவர் சாமானிய பெண் ஒருவரையே கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அவர் மகன் சூர்யாவோ, நடிகை ஜோதிகாவை காதலிப்பதாகவும், அவரை கல்யாணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகவும் சிவகுமாரிடம் சொன்னார்.அவரோ, தங்கை இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது, நீ வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவளின் கல்யாணத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி, அந்த காதலை தட்டிக் கழிக்க முயன்றிருக்கிறார்.
(2 / 4)
ஆனால், சூர்யாவோ பொறுமையாக இருந்து, பல படங்களில் நடித்து, சம்பாதித்து, தங்கையை கல்யாணம் செய்து கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சிவகுமாரிடம் சென்று, என்னுடைய கடமையை முடித்து விட்டேன். இப்போது என்னுடைய காதலுக்கு ஒப்புதல் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். இதனையடுத்து வேறு வழி இல்லாமல், சிவகுமார் சூர்யாவின் காதலுக்கு ஒப்புதல் தந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு கல்யாணம் நடந்தது. இரண்டு குழந்தைகளும் பிறந்தன.
(3 / 4)
Bayilvan ranganathan: ஜோதிகா சிவகுமார் மோதல்.. மும்பையில் தனி பங்களா.. பயில்வான் ரங்கநாதன் ஓப்பன் டாக்! சிவகுமார் சந்தோஷம் அடைந்தார். இந்த நிலையில்தான் ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்று சொல்ல, சிவக்குமார் அதனை மறுத்தார்.ஆனால் கதையைக்கேட்ட பின்னர், சரி ஒரு படம் தானே முடித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி அனுமதி கொடுத்தார். ஆனால் 36 வயதினிலே திரைப்படத்தை தொடர்ந்து, ஜோதிகா பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை.
(4 / 4)
சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் சென்னையில் பிரமாண்ட பங்களா கட்டப்பட்டது. அதனுடைய கிரகப்பிரவேசம் முடிந்த மறு மாதமே ஜோதிகா மும்பை கிளம்பிச் சென்று விட்டார்அண்மையில் சூர்யாவின் மகன் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கினார். அந்த நிகழ்ச்சியில் சிவகுமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.ஆனால், ஜோதிகா கலந்து கொள்ளவில்லை. தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே என்ன விதமான கருத்து மோதல்கள் இருந்தாலும் கூட, அவர்கள் மகன்கள் என்ற உடன், உடனே வந்து ஒன்றாக நின்றார்கள். ஆனால் ஜோதிகா நிற்கவில்லை. ஜோதிகா மும்பையில் சூர்யாவிற்கு பங்களா ஒன்றை கட்டிக்கொடுத்து இருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். கூடவே சூர்யாவையும், ஹிந்தியில் கதாநாயகனாக மாற்றிவிட வேண்டும் முயற்சிகள் எடுத்து கொண்டிருக்கிறார். அந்த முயற்சியின் வாயிலாக சூர்யா ஜோதிகாவின் பக்கம் சென்றதாக சொல்லப்படுகிறது" என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்