சூப்பர் ஸ்டார் எல்லாம் இனி சும்மா! ஒத்த படத்துக்கு கத்தையாக காசு வாங்கிய நடிகர்!
இந்தியாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களை கடந்து தென்னிந்திய நடிகர் ஒருவர் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி தன்னை மாஸ் ஹீரோவாக மாற்றியுள்ளார்.

இந்தியாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள், தாங்கள் நடிக்கும் படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவர். ஆனால், சமீப காலங்களாக நடிகைகள் மற்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவர்களே கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர்.
100 கோடி பென்ச் மார்க்
இதனால், நடிகர்கள் அவர்களின் மார்க்கெட்டிற்கு தகுந்தார் போல தங்களது சம்பளத்தில் கோடிகளை அதிகரித்து வருகின்றனர். அப்படிப் பார்த்தால் சில நாட்களுக்கு முன் அதிகபட்ச சம்பளமே 100 கோடி ரூபாய் என்ற பென்ச் மார்க் இருந்தது. ஆனால், அமிதாப் பச்சன், ரஜினி காந்த், ஷாருக் கான், சல்மான் கான், விஜய் என முன்னணி நடிகர்கள் அவர்களது சம்பளத்தை 100 கோடியிலிருந்து உயர்த்தினர்.
ரஜினி- விஜய் போட்டி
சமீபத்திய தகவலின் படி, நடிகர் ரஜினி காந்த் அவரின் ஜெயிலர் படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதே அதிகம் எனக் கூறப்பட்டது. பின், இதனை நடிகர் விஜய் முறியடித்து அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளத்தை வாங்கினார். இதன் மூலம் இந்தியத் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களாக கோலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினி காந்த்தும், விஜய்யும் இருந்து வந்தனர்,