Vj Chithra : தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vj Chithra : தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

Vj Chithra : தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

Divya Sekar HT Tamil
Aug 10, 2024 01:39 PM IST

Vj Chithra Case : 2020-ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது சித்ரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!
தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

சித்ராவை, ஹேம்நாத், அடித்து துன்புறுத்தியதாகவும் அது தாள முடியாமல் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஹேம்நாத் நிரபராதி

இந்நிலையில், பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என்று திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ஆம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிசம்பர்15-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், 2021 மார்ச் 2-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

தொழில் அதிபர் தான் காரணம்

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என் மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

சித்ரா மரணத்துக்கு ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும்.

என் மனைவி எனக்கு திரும்பி கிடைக்க மாட்டாள்

ஆனால் அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும்? அப்படி செய்தாலும் என் மனைவி எனக்கு திரும்பி கிடைக்க மாட்டாள். தற்போது என் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கவே வாழ்ந்து வருகிறேன் எனக் கூறியிருந்தார்

இந்த நிலையில் காவல்துறையினர் சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். இவர்களை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர்.

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் விடுதலை

இந்த வழக்கின் விசாரணையானது திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என இந்த வழக்கின் தீர்ப்பு திருவள்ளூர் மகிலா விரைவு நீதிமன்ற.ம் நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார். தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் உரிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் திருவள்ளூர் மகிளா நீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்டார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.