Tamil Top 10 News : நடிகை சித்ரா மரண வழக்கு,பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை..இஸ்ரேல் தாக்குதல் இன்றைய டாப் 10 செய்திகள்!-today top 10 news from actress chitra death case to israel airstrike on school - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News : நடிகை சித்ரா மரண வழக்கு,பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை..இஸ்ரேல் தாக்குதல் இன்றைய டாப் 10 செய்திகள்!

Tamil Top 10 News : நடிகை சித்ரா மரண வழக்கு,பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை..இஸ்ரேல் தாக்குதல் இன்றைய டாப் 10 செய்திகள்!

Divya Sekar HT Tamil
Aug 10, 2024 01:09 PM IST

Tamil Top 10 News : நடிகை சித்ரா மரண வழக்கு முதல் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் வரை என நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

நடிகை சித்ரா மரண வழக்கு,பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை..இஸ்ரேல் தாக்குதல் இன்றைய டாப் 10 செய்திகள்!
நடிகை சித்ரா மரண வழக்கு,பொன் மாணிக்கவேல் வீட்டில் சோதனை..இஸ்ரேல் தாக்குதல் இன்றைய டாப் 10 செய்திகள்!

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம் வயநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.ஆய்விற்கு பிறகாவது, வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிப்பாரா என எதிர்பார்ப்பு.

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு?

கடந்த அதிமுக ஆட்சியில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விண்ணப்பதாரர்கள் எவரும் புகார் அளிக்கவில்லை என சென்னை பல்கலைக்கழகம் விளக்கம்.2018ல் அளித்த புகார் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால் விசாரணை நடத்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ண குமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு உத்தரவு.

பிரபல சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

VJ Chitra : சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரது கணவர் ஹேமநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இன்றும் உயர்ந்த தங்கம் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 10) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.51,560-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி இன்று கிராம் ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,000-க்கும் விற்பனையாகிறது.

பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 100க்கும் மேற்பட்டோர் பலி

IsraelStrike : கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏராளமான மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார்

BabyKidnap :சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று காணாமல் போன பச்சிளம் ஆண் குழந்தையை, 15 மணிநேரத்தில் சேலம் அருகேயுள்ள காரிப்பட்டியில் காவல்துறையினர் மீட்டனர். தனக்கு திருமணமாகி குழந்தை இல்லை என்பதால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திச் சென்றுள்ளார், வினோதினி என்ற இளம்பெண். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவரை அடையாளம் கண்டு குழந்தையை பத்திரமாக மீட்டனர்

மீன் விற்பனை அங்காடியை திமுக எம்.எல்.ஏ. வேலு ஆய்வு

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வரும் 12ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ள மீன் விற்பனை அங்காடியை மயிலாப்பூர் திமுக எம்.எல்.ஏ. வேலு ஆய்வு செய்தார். 2 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி செலவில் 366 கடைகளைக் கொண்டதாக, இந்த மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது.

வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது

இந்த ஆண்டில் 2வது முறையாக வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. வீராணம் ஏரிக்கு கடந்த ஒன்பது நாட்களாக கீழணையிலிருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

“வினேஷ் போகத்திற்கு நிச்சயமாக வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும்” -சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தல்

தனது போட்டியாளர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களை எட்டிய வினேஷ் போகத் நிச்சயம் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர். அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.