தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Dhanush 51 Movie Title Look And Poster Released

D51 Title Look: வேற மாதிரி இருக்காரே.. குபேரா படத்திற்காக டோட்டலாக மாறிய தனுஷ்! - கொண்டாடும் ரசிகர்கள்

Aarthi Balaji HT Tamil
Mar 08, 2024 07:32 PM IST

Kubera First Look: தனுஷ் 51 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 6.30 மணிக்கு வெளியானது.

தனுஷ்
தனுஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான 'கேப்டன் மில்லர்' ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்ற கருத்து ஒருபக்கம் இருந்தாலும் வசூல் சாதனை புரிந்தது.

இதனையடுத்து நடிகர் தனுஷ் தனது 51வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா மூவியாக உருவாகி வருகிறது தனுஷின் D 51. தெலுங்கில் பிரபல இயக்குநரான சேகர் கமுலா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

'தனுஷ் D 51' எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகர்ஜூனா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் 51 ஆவது பட போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று (மார்ச். 8) மாலை 4 மணி ஐந்து நிமிடத்திற்கு வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் படத்தின் அப்டேட் வெளியிடுவதில் காலதாமதம் நீடித்து வந்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கடுப்பாகினார்கள்.

இறுதியாக அனைத்து கோளாறுகளும் சரி செய்யப்பட்டு தனுஷ் 51 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 6.30 மணிக்கு வெளியானது.

அதன் படி தனுஷ் 51 ஆவது படத்திற்கு குபேரா என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசை அமைக்கின்றார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது.

இந்தப் படத்திலும் வழக்கம் போல தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து இருக்கிறார். போஸ்டரை பார்க்கும் போது ஒரு பக்கம் பிதாமகன் சேது கெட்டப் போலவே தனுஷ் தோன்றுகிறார். குபேரா போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.

வாத்தி படத்துக்கு பின்னர் நடிகர் தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருப்பதியை தொடர்ந்து மும்பையில் D 51 படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தனுஷ், ராஷ்மிகா மந்தனா இருவரும் நடிக்கும் காட்சிகளை படமாக்க இயக்குநர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் D 51 படப்பிடிப்பு முடிவுக்கு வரும் எனவும் இந்தாண்டு இறுதிக்குள் படம் ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்