Relationship : உங்கள் வாழ்வை மாற்றும் உறவு முறைகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : உங்கள் வாழ்வை மாற்றும் உறவு முறைகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Relationship : உங்கள் வாழ்வை மாற்றும் உறவு முறைகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2024 03:00 PM IST

Relationship : உங்கள் வாழ்வை மாற்றும் உறவு முறைகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Relationship : உங்கள் வாழ்வை மாற்றும் உறவு முறைகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்!
Relationship : உங்கள் வாழ்வை மாற்றும் உறவு முறைகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்!

மற்றவர்களுடன் நீங்கள் பகிரும் உறவை நீங்கள் தெரிந்துகொண்டால், குறிப்பாக அது பலமான பிணைப்பு நிறைந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது நெருக்கமான உறவாக இருக்கலாம். மற்ற எந்த வகையாக இருந்தாலும், அதில் தொடர்ந்து நீங்கள் எப்படி என்பதை அது உங்களுக்கு அறிவுறுத்தும். 

எனவே இதை புரிந்துகொள்ள நிபுணர்களும், உளவியல் மருத்துவர்களும் உறவுகளின் வகைகளை பிரிந்து வைத்துள்ளனர். அவை ப்ளாடோனிக், டாக்சிக், கோடிபென்டன்ட், ரொமாண்டிக், காசுவல் மற்றம் ஓபன் என அவை வகைப்படும். இந்த உறவுகள் நமது வாழ்வை எப்படி பாதிக்கிறது என்று பாருங்கள்.

ப்ளாடோனிக் உறவு

ஆத்மார்த்தமான காதல்

இந்த உறவு அதிக நெருக்கம் நிறைந்தது. இந்த அன்பின் நெருக்கம் பலமான அடித்தளம் வாய்ந்தததாக இருக்கும். இந்த உறவில், இருவரும் நெருக்கம், புரிதல் மற்றும் காதல் மற்றும் உடல்ரீதியான நெருக்கம் என அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். இந்த உறவு இதய ஆரோக்கியத்தை குறைக்கிறது. மனஅழுத்தை மேம்படுத்துகிறது.

ரொமாண்டிக் உறவு

காதல் உறவு

மிக நெருக்கமான காதல் உறவுகளை இந்த உறவு பகிரும். காதல் கடிதங்கள் எழுதுவது அல்லது காதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என அது இருக்கும். இது ஆழ்ந்த உணர்வுகளில் இருந்து மேலெம்புகிறது. நெருக்கம் மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்திருக்கும்.

கோடிபென்டன்ட் உறவு

சார்ந்திருத்தல் உறவு

இந்த உறவில் சிறிது நச்சு கலந்திருக்கம். ஒரு பார்ட்னர் முழுவதும் மற்றவரை சார்ந்திருப்பார். ஒருவரை மற்றொருவரை ஒரு கைப்பிடியாக பயன்படுத்துவார். இந்த சமமின்மை பிரச்னைகளை தவிர்க்க உதவும். குறிப்பாக தனிப்பட்ட அடையாளத்தை இழக்க நேரிடும். உணர்வு முதிர்ச்சி, உறவில் சிக்கல்களை மேலாண்மை செய்வது சார்ந்திருத்தலை தவிர்க்க அவசியம்.

காசுவல் உறவு

சாதாரண உறவு

இது டேட்டிங் உறவு. இந்த உறவில் தீவிரமாக ஈடுபடமாட்டார்கள். இதில் விளையாட்டுக்காக ஈடுபடுவார்கள். இதில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த உறவில் எவ்வித கட்டுப்பாடும், பிணைப்பும் இருக்காது. ஒரு நபரின் உணர்வுகள் திருப்தியில்லாமல் இருக்கும். மற்றொருவர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார். இது ஒரு இரவு மட்டும் உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு உகந்தது அல்லது டேட்டிங் மட்டும் செல்லும் மனநிலையில் உள்ளவர்களுக்கானது.

ஓபன் உறவு

திறந்த மனதுடைய உறவு

திறந்த மனதுடைய உறவில், பார்ட்னர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக மற்றவருடன் உறவில் இருப்பது அனுமதிக்கப்படும். ஒரு தார மணமாக இல்லாமல், மற்றொருவருடன் இவர்கள் உறவில், ஊரறியவும் இருந்துகொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு தேவை திறந்த, தெளிவான உரையாடல் வேண்டும். உணர்வு எல்லைகள், இருதரப்பு புரிதல் இந்த உறவை பராமரிக்க மிகவும் அவசியம்.

டாக்சிக் உறவு

நச்சு உறவு

நச்சு உறவில் உடல், உணர்வு, மனம் என அனைத்தும் பாதிக்கப்படும். இது சுயநல உறவுக்காக செய்யப்பட்டது. இந்த உறவில் ஒருவருக்கொருவர் ஆதரவு இருக்காது. சண்டை இருக்கும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது இருக்கும். கட்டுப்பாடு, மரியாதையின்மை இருக்கும். மனஅழுத்தம் இருக்கும். நச்சு உறவில் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், எதிர்கால குறிக்கோள்கள் என அனைத்தும் கேள்விக்குறிதான்.

ஆரோக்கியமான உறவுக்கான திறவுகோல்

வகைகள் எதுவாக இருந்தாலும், ஆரோக்கியமான உறவை பராமரிக்க திறந்த உரையாடல் வேண்டும். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும். அனுதாபம் வேண்டும். ஆரோக்கிய உறவுகள் ‘உணர்வு ரீதியான நலனுக்கு உதவுகிறது. நச்சு உறவுகள், மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே தெளிவான எல்லைகளை உருவாக்க வேண்டும். தேவைப்படும்போது நிபுணர்களின் ஆலோசனையைப்பெறுவது நல்லது. இதுவே ஆரோக்கியமான உறவையும், சமூக வாழ்வையும் வாழ்வதற்கு நல்லது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.