Top 10 News (29.04.2023): ராகுல்காந்தி மனு விசாரணை முதல் பிரதமர் பிரச்சாரம் வரையிலான முக்கிய செய்திகள்
கர்நாடகாவில் பிரதமர் மோடி இன்று பாஜக பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.
பிரதமர் மோடி
- அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டில் மாநில கல்வி திட்டத்தில் கல்வி பயிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 29) முதல் சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.
- தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாடு இன்று தாதாப்பட்டி சந்திரா மகாலில் நடைபெறுகிறது
- தமிழ்நாட்டில் நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று முதல் காசி தெலுங்கு சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் எனக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
- இலங்கையின் யாழ்ப்பாணம், காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 12R PRO சீரிஸ் போன்கள் இன்று அறிமுகம் ஆகின்றன.
- ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று மாலை 3.30 மணி - கல்கத்தா - குஜராத் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணி டெல்லி- ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
டாபிக்ஸ்
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.