தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dmk Vck Allaiance: விசிக கேட்டது 3! கொடுத்தது 2! திமுக-திருமா இடையே ஒப்பதம் கையெழுத்தானது!

DMK VCK Allaiance: விசிக கேட்டது 3! கொடுத்தது 2! திமுக-திருமா இடையே ஒப்பதம் கையெழுத்தானது!

Kathiravan V HT Tamil
Mar 08, 2024 01:26 PM IST

“விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”

விசிக தலைவர் தொல் திருமாவளவன்
விசிக தலைவர் தொல் திருமாவளவன்

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-விசிக மற்றும் மற்ற தோழமை கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக தொகுதி உடன்பாட்டில், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தம் சற்று முன் கையெழுத்தானது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் என்ன பகிர்வு முறை கையாளப்பட்டதோ அதே பகிர்வு முறை ஒவ்வொரு கட்சியின் உடன்பாட்டோட்டு தொகுதி பங்கீடு நடந்துள்ளது. விசிக கட்சி மூன்று தனித் தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதிகளை கேட்டோம். 

பின்னர் இரண்டு தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதிகளை வலியுறுத்தினோம். கடந்த தேர்தல்களில் இந்த கூட்டணி எவ்வளவு கட்டுக்கோப்பாக இயங்கியதோ, அந்த அடிப்படையில் விரிவான கலந்தாய்வுக்கு பிறகு, கடந்த தேர்தலில் பகிரப்பட்ட அதே முறைக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளோம். தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், ஆந்திரா, கேரளாவிலும் போட்டியிடுகிறோம். இதற்கான சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்.  மனம் திறந்து விரிவான விவாதங்களை ஒப்புக்கொண்டு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என கூறி உள்ளார். 

ஏற்கெனவே திமுக கூட்டணியில் ஐ.யு.எம்.எல், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மதிமுகவுக்கு தலா ஒரு தொகுதியும், சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் தற்போது விசிக உடன் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

WhatsApp channel