DMDK: 3 வங்கி கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ்! ஒரு BMW கார்! கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சொத்து மதிப்பு இதோ!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dmdk: 3 வங்கி கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ்! ஒரு Bmw கார்! கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சொத்து மதிப்பு இதோ!

DMDK: 3 வங்கி கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ்! ஒரு BMW கார்! கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சொத்து மதிப்பு இதோ!

Kathiravan V HT Tamil
Published Mar 26, 2024 03:53 PM IST

”பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் 4 ரக காரும், 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா ஜாஸ் ரக காரும், 2008ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட ராயல் என்பீல்டு இருசக்கர வாகனமும் தன்னிடம் உள்ளதாக கூறி உள்ள விஜயபிரபாகரன், 192 கிராம் தங்கமும், 560 கிராம் வெள்ளியும் இருப்பதாக கூறி உள்ளார்”

விருதுநகர் வேட்பாளர் விஜயபிரபாகரன்
விருதுநகர் வேட்பாளர் விஜயபிரபாகரன்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் விஜயபிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுத்தாக்கல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வேட்புமனுத்தாக்கலில் என்ன இருக்கும்?

வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளர் மற்றும் அவரை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி வைப்புத் தொகை, நிறுவனங்களில் வைத்திருக்கும் பரஸ்பர நிதி மற்றும் நிறுவன பங்குகள், காப்பீடு குறித்த விவரங்கள், கடன் பத்திரங்கள், தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அளித்துள்ள கடன் விவரங்கள், கடன் வாங்கிய விவரங்கள், மோட்டார் வாகனங்கள் குறித்த விவரங்கள், வேட்பாளர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

சொத்து மதிப்பு

தனக்கு 17 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கூறி உள்ளார். 11.38 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும். 6.57 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் என மொத்தமாக 17 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் தனது தாயார் பிரேமலதா விஜயகாந்திற்கு 6.49 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், 48 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளதகா கூறி உள்ளார்.

தற்போது தன்னிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், தனது தாயார் பிரேமலதாவின் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், மொத்துமுள்ள 7 வங்கி கணக்குகளில் மூன்று வங்கி கணக்குகளில் ஜிரோ பேலன்ஸ் மெயிண்டென் செய்வதாக கூறி உள்ளார். 

கேப்டன் மீடியாவில் 45 லட்சம் மதிப்புள்ள பங்குகளும்,விபிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமெடெட் நிறுவனத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள பங்குகளும், கேப்டன் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமெடெட் மற்றும் விபிவிஎஸ் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமெடெட் நிறுவனங்களில் தலா 5 ஆயிரம் மதிப்புள்ள பங்குகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் 4 ரக காரும், 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா ஜாஸ் ரக காரும், 2008ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட ராயல் என்பீல்டு இருசக்கர வாகனமும் தன்னிடம் உள்ளதாக கூறி உள்ள விஜயபிரபாகரன், 192 கிராம் தங்கமும், 560 கிராம் வெள்ளியும் இருப்பதாக கூறி உள்ளார். 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.