Vijaya Prabhakaran: விஜயகாந்த் பாணியில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய பிரபாகரன்!
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதிக்கு தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை தந்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் விஜயபிரபரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னுத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விஜய பிரபாகரன் தேமுதிக கொடியை ஏற்றி வைத்து அன்னதானம் வழங்கினார். வத்தலக்குண்டில் காரில் அமர்ந்தபடி கைகூப்பி சென்ற விஜய பிரபாகரின் கரங்களை பற்றிய பெண்கள் சிலர் விஜயகாந்த் மறைவுக்கு ஆறுதல் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.