தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  H Raja About Hindus: ’தட்டுக்காசு யாருக்கு சொந்தம்! இந்துக்கள் என்ன இளிச்சவயர்களா!’ கோதாவில் குதித்த ஹெச்.ராஜா!

H Raja About Hindus: ’தட்டுக்காசு யாருக்கு சொந்தம்! இந்துக்கள் என்ன இளிச்சவயர்களா!’ கோதாவில் குதித்த ஹெச்.ராஜா!

Kathiravan V HT Tamil
Apr 29, 2024 04:30 PM IST

”சொத்து மறுபகிர்வு வரியை இந்துக்களிடம் இருந்து பறித்து, சிறுபான்மையினரிடம் தர உள்ளதாக கூறி உள்ளார்கள். நீங்கள் மைனாரிட்டிஸ் என்று பேசினால், மெஜாரிட்டீஸ் என்று நாங்கள் பேசுவோம். இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா?”

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு - ஹெச்.ராஜா
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு - ஹெச்.ராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குரங்குக்கு முன் கஞ்சிகலையத்தை கொண்டு போய் வைத்தால் குரங்கு கை வராது, குட்டியின் வாலைவிட்டு பார்க்கும், குட்டி கத்தினால் குரங்கு சூடாக உள்ளது என்று குரங்கு தொடாது. அது போல் ராகுல் காந்தியும், ப.சிதம்பரமும் சாம்பிட்ரோடோவை வைத்து செல்வங்களை மறுபகிர்வு செய்வது குறித்து சோதிக்கின்றனர். 

நான் சி.ஏ. படிக்கும் போதே வருமானவரி 60 சதவீதத்திற்கும் மேல் இருந்தது. அதற்கு பிறகு அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு இந்திரா காந்தி காலமான பிறகு அம்மா சொத்தை பெற இந்தியாவில் உள்ள வரியை அவர் நீக்கினார். 

இந்தியாவில் இருந்த சொத்து மறுபகிர்வு வரியை இந்துக்களிடம் இருந்து பறித்து, சிறுபான்மையினரிடம் தர உள்ளதாக கூறி உள்ளார்கள். நீங்கள் மைனாரிட்டிஸ் என்று பேசினால், மெஜாரிட்டீஸ் என்று நாங்கள் பேசுவோம். இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா?

காங்கிரஸின் தீயபுத்தி என்பது இந்துக்களை வஞ்சிக்க வேண்டும்; சிறுபான்மயினரை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். 

பெருமான்மை சமூதாயத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் சூதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதால் பிரதமரை வாய்க்கு வந்தது போல் பேசிக் கொண்டு இருக்கின்றனர். 

மேட்டுப்பாளையத்தில் உள்ள வன பத்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள 4 அர்ச்சகர்கள் தட்டுக்காசை எடுத்துக் கொண்ட புகாரில் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

அறநிலையத்துறை, இந்து அறம் அழிக்கும் துறை என்று பல இடங்களில் பேசி உள்ளேன். அப்படி பேசியதால் எனக்கு எதிராக 26 வழக்குகள் உள்ளது. என் மீது உள்ள அத்தனை வழக்குகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கம் போட்டு உள்ளது. இந்துக்களுக்காக யாராது குரல் கொடுத்தால் குரல் வலையை நெறிக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். 

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலில், அர்ச்சகர் பணிநியமன ஆணையை நான் பார்த்தேன். அதில் தங்களுக்கு சம்பளம் இல்லை என ஆணையில் உள்ளது. எந்த அறநிலையத்துறை அதிகாரிக்கோ ‘உங்களுக்கு சம்பளம் இல்லைனு’ ஆர்ட்டர் கொடுங்கடா!, அவ்வளவு அராஜகம் நடக்கிறது. 

சென்னை பூந்தமல்லியில் உள்ள வரதாராஜ பெருமாள் கோயில் சொத்துக்கள் திருடப்படுகிறது என்று நான் எழுத்துப்பூர்வ புகாரை அளித்து உள்ளேன். அந்த பட்டாச்சாரியாருக்கு மாதம் 300 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிலும் 30 மாத சம்பளம் அவருக்கு பாக்கி உள்ளது. 

கோயில் தட்டுக்காசு என்பதை பொறுத்தவரை அர்ச்சகர்களுக்கு உரிமை உள்ளதால் சம்பளம் தருவதில்லை, இது பெரிய கோயில்களில் சம்பளம் கூடுதலாக வரும், சில கோயில்களில் வராது. 

வன பத்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள 4 அர்ச்சகர்களும், தற்காலிக பணியாளர்கள்தான். அவர்களுக்கு தட்டுக்காசு கூட எடுக்க கூடாது என்றால் சோத்துக்கு எங்கே போவார்கள். தமிழ்நாட்டிலேயே வஞ்சிக்கப்படும் பிரிவினர் அர்ச்சகர்கள்தான். 

கோயிலில் உள்ள ஒரு இணை ஆணையருக்கு மாதம் 2 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் ஒரு வேலையும் செய்வது இல்லை என்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் தீர்ப்பில் சொல்லி உள்ளனர். 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு, உற்சாகம் வந்தால் அல்லோலூயா கோஷத்தை போடுகிறார். வன பத்ரகாளி அம்மன் கோயில் விஷத்தில் அறநிலையத்துறையே மறுஆய்வு மனுவை போட வேண்டும் என அவர் கூறி உள்ளார். 

WhatsApp channel