தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Elections 2024: கொளுத்தும் வெயில்! ஆர்வத்துடன் ஓட்டு போட வந்த 3 மூத்த குடிமக்கள் உயிரிழப்பு!

Lok Sabha Elections 2024: கொளுத்தும் வெயில்! ஆர்வத்துடன் ஓட்டு போட வந்த 3 மூத்த குடிமக்கள் உயிரிழப்பு!

Kathiravan V HT Tamil
Apr 19, 2024 11:58 AM IST

”நாடு முழுவதும் 85 வயது மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து இருந்தது”

சேலத்தில் ஓட்டு போட சென்ற மூத்த குடிமக்கள் உயிரிழப்பு
சேலத்தில் ஓட்டு போட சென்ற மூத்த குடிமக்கள் உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் நாடு முழுவதும் 85 வயது மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து இருந்தது. குறிப்பாக சர்க்கர நாற்காலி மூலமாக வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து சென்று முதியவர்கள் வாக்களித்த பிறகு வெளியே அழைத்து வரும் வசதிகள்  தேர்தல் ஆணையம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் வாக்களிக்க மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். 

அப்போது திடீரென பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது அப்போது வாக்குச்சாவடி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது இதில் உடனடியாக சிகிச்சைக்காக பழனிச்சாமி அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பழனிச்சாமி உயிரிழந்தார் அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டையம் பள்ளியை சேர்ந்த சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி வாக்களிக்க சென்ற போது வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மூதாட்டி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் ஓயாத நிலையில் அரக்கோணம் நாடாளுன்மன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலியை சேர்ந்த கனகராஜ் என்பவர் வாக்கு செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்தபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு வாக்களிக்க செல்லுமாறும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

WhatsApp channel