Karthi Chidambaram: ’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கைப்பற்ற வடநாட்டு சதி!’ வைரல் ஆகும் கார்த்தி சிதம்பரம் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Karthi Chidambaram: ’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கைப்பற்ற வடநாட்டு சதி!’ வைரல் ஆகும் கார்த்தி சிதம்பரம் பேச்சு!

Karthi Chidambaram: ’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கைப்பற்ற வடநாட்டு சதி!’ வைரல் ஆகும் கார்த்தி சிதம்பரம் பேச்சு!

Kathiravan V HT Tamil
Apr 14, 2024 09:16 PM IST

”இந்த கோயிலை எப்படி நடத்துவது என்பதை அந்த ட்ரஸ்ட் முடிவு செய்யும் என்பார்கள். என்ன முறையில் வழிபாடு நடத்தனும், யார் கோயிலுக்கு வரலாம் என்பதையும் அந்த ட்ரஸ்டே முடிவு செய்யும் என்பார்கள்”

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான கார்த்தி சிதம்பரம் மக்களிடம் உரையாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், அயோத்தி ராமர் கோயிலை அராசங்கம் கட்டியது இல்லை. அதனை தனியார் ட்ரஸ்ட் மூலம் கட்டி உள்ளனர். நம்ம ஊரில் உள்ள ஹெச்.ஆர்.என்.சி.இ டிபார்ட்மண்ட் மாதிரி எல்லாம் கிடையாது. அந்த ட்ரஸ்டுக்கு 3 ஆயிரம் கோடி பணம் உள்ளது. அந்த ட்ரஸ்ட் வாங்கும் வெளிநாட்டு நிதிக்கு வரி கிடையாது என்று சொல்லியதால் மேலும் 8 ஆயிரம் கோடி வரப்போகிறது. ஊரில் உள்ள எல்லா மார்வாடி, சேட்டுக்களும் அந்த ட்ரஸ்டுக்கு காசு அனுப்புறான்.

11ஆயிரம் கோடி அந்த ட்ரஸ்டில் இருக்கும், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கோயிலுக்கு சம்பந்தப்பட்ட மற்ற மாநிலத்தில் உள்ள பெரிய கோயில்களை அந்த ட்ரஸ்ட் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல உள்ளனர்.

அப்படி தமிழ்நாட்டில் இருந்து 2 கோயிலை அவர்கள் குறி வைக்கிறார்கள். அதில் ஒன்னு ராமேஸ்வரம் கோயில், மற்றொன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த 2 கோயிலையும் இங்கிருந்து எடுத்து அங்குள்ள ட்ரஸ்டில் கொண்டு போய் சேர்க்கலாம் என்று பார்க்கிறார்கள்.

அப்படி சேர்த்ததற்கு பிறகு ‘இந்த கோயிலை எப்படி நடத்துவது என்பதை அந்த ட்ரஸ்ட் முடிவு செய்யும் என்பார்கள். என்ன முறையில் வழிபாடு நடத்தனும், யார் கோயிலுக்கு வரலாம் என்பதையும் அந்த ட்ரஸ்டே முடிவு செய்யும் என்பார்கள். அண்ணல் அம்பேத்கர், காந்தியடிகள், காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் போராடியது எல்லாம் வீணாகிவிடும், பிறகு கோயிலை சுற்றி யார் கடை வைக்கலாம் என்று முடிவு செய்வார்கள், அப்புறம் கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் யார் இருக்கலாம் என்று முடிவு செய்வார்கள்’ இது நடந்தால் இங்குள்ள சமுதாய நீதி பின்னுக்கு தள்ளப்படும். இது ரொம்ப ஆபத்து என கார்த்தி சிதம்பரம் பேசினார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.