தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai Fire: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மீண்டும் பயங்கர தீ விபத்து - அச்சத்தில் மக்கள்!

Madurai Fire: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மீண்டும் பயங்கர தீ விபத்து - அச்சத்தில் மக்கள்!

Karthikeyan S HT Tamil
Jul 22, 2023 10:54 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு மாசி வீதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தரைத்தளத்தில் கடையும், மேல்தளத்தில் குடோனும் செயல்பட்டு வரும் நிலையில் பிளாஸ்டிக் கடையின் முதல் தளத்தில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து காட்சி அளிக்கிறது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதே பிளாஸ்டிக் கடையில் கடந்த 17 ஆம் தேதிதான் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. மதுரையைச் சுற்றியுள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட திடீர் நகர், அனுப்பானடி, தல்லாகுளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் அதே கடையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1194 தீ விபத்துக்கள் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டடங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக பொதுமக்களும் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் சூழலில் தற்போது இன்று காலை மீண்டும் ஒரு தீ விபத்து நிகழ்ந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்