தமிழ் செய்திகள்  /  Elections  /  Ht Mp Story: Background On Tiruvannamalai Parliamentary Constituency History And Candidates

HT MP Story: ‘திமுக மலையாக இருக்கும் திருவண்ணாமலை!’ வெற்றி யாருக்கு? இதோ கள நிலவரம்!

Kathiravan V HT Tamil
Mar 31, 2024 06:00 AM IST

”தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதியில், திமுக இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது”

திருவண்ணாமலை தொகுதி கள நிலவரம்
திருவண்ணாமலை தொகுதி கள நிலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தல்ல் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி!

2009ஆம் ஆண்டுக்கு முன் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, செங்கம், தண்ட்ராம்பட்டு, கலசப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக திருப்பத்தூர் தொகுதி இருந்தது. 

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திருவண்ணாமலை தொகுதியாக மாறியது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளது. 

அதிக முறை வென்ற திமுக!

திருப்பத்தூர் தொகுதியாக இருந்த போது 1962ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றத் தேர்தல்களில், திமுக 8 முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது. 

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதியில், திமுக இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது. 

அமோக வெற்றி பெற்ற திமுக!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை 6,66,272 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி 3,62,085 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் ஞானசேகர் 38,639 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு 27,503 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் 14,654 வாக்குகளையும் பெற்றனர். 

தற்போது யார்?

தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள சி.என்.அண்ணாதுரையே மீண்டும் களம் இறக்கப்பட்டு உள்ளார். அதிமுக சார்பில் கலியபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ்பாபு, பாஜக சார்பில் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். 

வேட்பாளரின் பலம்!

சிட்டிங் எம்.பி என்பதால் சி.என்.அண்ணாதுரைக்கு தொகுதி முழுவதும் அறிமுகம் உண்டு. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டம்னறத் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. 

3ஆண்டுகால திமுக அரசின் மீதான அதிருப்தி அதிமுக வேட்பாளராக களம் இறங்கி உள்ள கலியபெருமாளுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாஜக வேட்பாளராக களம் இறங்கும் அஸ்வத்தாமனுக்கு பாமக கூட்டணி பலம் சேர்க்கும். புதியதாக வாக்களிக்கும் வாக்காளர்கள் ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபுவுக்கு பலம் சேர்க்கலாம். 

WhatsApp channel