தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Fact Check: ‘பேஸ்புக் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ராகுல் சொன்னாரா?’ உண்மை என்ன?

Fact Check: ‘பேஸ்புக் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ராகுல் சொன்னாரா?’ உண்மை என்ன?

Boom HT Tamil
May 12, 2024 07:22 PM IST

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள "பெஹ்லி நௌக்ரி பக்கி" என்ற பயிற்சி திட்டம் குறித்து ராகுல் காந்தி விளக்கினார்.

Fact Check: ‘பேஸ்புக் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ராகுல் சொன்னாரா?’ உண்மை என்ன?
Fact Check: ‘பேஸ்புக் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ராகுல் சொன்னாரா?’ உண்மை என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

காப்பகப்படுத்தப்பட்ட இடுகையை இங்கே காணலாம்.

கூற்று: சமூக ஊடகங்களில் உலாவுகின்ற இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ .1 லட்சம் அளிக்கப்படும் என ராகுல் காந்தி பேசும் வீடியோ வலைத்தளங்கில் பரவி அருகிறது

உண்மை: இந்த வீடியோ ஏப்ரல் 20, 2024 அன்று பீகாரின் பாகல்பூரில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்டது. 10:59 ஆவது நிமிடத்தில், "பெஹ்லி நௌக்ரி பக்கி" என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பயிற்சித் திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசினார். "இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் உரிமை வழங்கப்படும். இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் அவர்களின் ஆரம்ப வேலை அனுபவத்திற்கான வாய்ப்பை வழங்குவதை உள்ளடக்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சம்பாதிப்பதற்கு வழங்கும் உரிமைகளைப் போலவே, பட்டதாரிகளும் ஒரு வருட பயிற்சிக்கு உரிமை பெறுவார்கள். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1,00,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும், இது மாதத்திற்கு ரூ.8,500 வழங்கப்படுவதற்கு சமம். இந்த காலகட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால், அவர்கள் நிரந்தர வேலைக்கு தகுதி பெறுவார்கள் என பேசி இருந்தார். வைரலாகும் இந்த வீடியோவின் 12:40 முதல் 12:57 வரையிலான பகுதிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. எனவே, பதிவில் கூறப்பட்டுள்ள கூற்று தவறானது.

வைரலாகும் வீடியோவின் கீஃப்ரேம்களைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் தேடலைச் செய்தபோது, ராகுல் காந்தியின் உரையின் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட வீடியோவை அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கண்டோம். ஏப்ரல் 20, 2024 அன்று பீகாரின் பாகல்பூரில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

பீகார் மாநிலம் பாகல்பூரில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரம்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரம்.

வீடியோவைப் பார்த்தபோது, 9:30 டைம் ஸ்டாம்பில், பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் கீழ் வேலையின்மை பற்றி காந்தி பேசத் தொடங்கினார். ராகுல் காந்தியின் பேச்சில், "நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா வேலையின்மையின் மையமாக மாறி உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எந்த இளைஞரிடமும் நீங்கள் கேட்டால், அவர்கள் வேலை செய்யவில்லை என்று கூறுவார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஏழு முதல் எட்டு மணி நேரம் செலவிடுகிறார்கள். ஏன்? ஏனெனில், நரேந்திர மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தொழில் பழகுநர் பற்றி விவாதித்த அவர், செல்வந்தர்கள் இந்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில் நாட்டில் குறைந்த வசதி படைத்தவர்கள் அத்தகைய திட்டங்களை அணுக முடியாது என்று குறிப்பிட்டார். 

10:59 நிமிட நேர வீடியோ கிளிப்பில், "பெஹ்லி நௌக்ரி பக்கி" என்று அழைக்கப்படும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பயிற்சித் திட்டம் குறித்து அவர் விவாதித்தார். "இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு தொழில் பழகுநர் உரிமை வழங்கப்படும். இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் அவர்களின் ஆரம்ப வேலை அனுபவத்திற்கான வாய்ப்பை வழங்குவதை உள்ளடக்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சம்பாதிப்பதற்கு வழங்கும் உரிமைகளைப் போலவே, பட்டதாரிகளும் ஒரு வருட பயிற்சிக்கு உரிமை பெறுவார்கள், இதன் போது ஆண்டுக்கு ரூ .1,00,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும், இது மாதத்திற்கு ரூ.8,500 க்கு சமம். இந்த காலகட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டால், அவர்கள் நிரந்தர வேலைக்கு தகுதி பெறுவார்கள். இந்த பயிற்சி வாய்ப்புகள் தனியார், பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகள் உட்பட பல்வேறு துறைகளில் கிடைக்கும். இந்த முயற்சி மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடும் வேலையில்லா இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்பயிற்சி திட்டம் குறித்து விளக்கினார்.

பொறுப்புத் துறப்பு: இந்த செய்திசக்தி கலெக்டிவில் முதலில் வெளியிடப்பட்டதன் ஒரு பகுதியாக HT Digital மூலம் மறுபிரசுரம் செய்யப்பட்டு உள்ளது.

WhatsApp channel