Prajwal Revanna Scandal: ’கொடூர பாலியல் குற்றவாளிக்காக பிரதமர் பிரச்சாரம் செய்து உள்ளார்!’ விளாசும் ராகுல் காந்தி!
“இந்த கொடூரமான குற்றச்சாட்டுகள் பாஜக மூத்த தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், பிரதமர் ஒரு வெகுஜன கற்பழிப்பாளருக்காக பிரச்சாரம் செய்தார், பிரச்சாரம் செய்தார்" ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்

பிரிஜ்வேல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தரமையாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார், (Congress X)
மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற 'கொடூரமான' குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற கொடூரமான குற்றச்சாட்டுகளை மீறி பிரதமர் மோடி ஒரு "வெகுஜன பாலியல் பலாத்கார" குற்றவாளிக்காக பிரச்சாரம் செய்தது "அதிர்ச்சியளிக்கிறது" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.