Yash Dayal: இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் சர்ச்சை: அந்தர் பல்டி அடித்த யஷ் தயாள்!
குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த யஷ் தயாள் சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது குஜராத் அணி சார்பாக யாஷ் தயாள் அந்த ஓவரை வீசினார். அப்போது 5 சிக்ஸர்களை விளாசி அசத்தினார் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங். இது பரவலாக பேசப்பட்டது. இதன்பின்னர் யஷ் தயாள் குஜராத் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
ஒரே ஓவரில் 5 சிக்சர்களை வாரி வழங்கிய யஷ் தயாளுக்கு பலரும் ஆறுதல் கூறினர். இதன்பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால், கடைசி வாரத்தில் சில போட்டிகளில் மட்டுமே குஜராத் அணிக்காக யஷ் தயாள் களமிறங்கினார். இந்த சிக்ஸர் விவகாரம் தொடர்பாக இருவரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானார்கள்.
இந்த நிலையில் இன்று காலை யஷ் தயாள், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சர்ச்சைக்குள்ளான கார்ட்டூன் போஸ்டரை பகிர்ந்திருந்தார். அந்த கார்ட்டூன் இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் வகையில் ல்வ ஜிகாத் குறித்து இடம்பெற்றிருந்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டனம் தெரிவித்தனர்.