தமிழ் செய்திகள்  /  Elections  /  Argument Between Dmk And Aiadmk Regarding Filing Of Nominations In North Chennai Parliamentary Constituency

DMK VS ADMK: ’நான் தான் முதலில் வந்தேன் போடா!’ வடசென்னையில் மோதிக் கொண்ட திமுக-அதிமுக! டென்ஷன் ஆன சேகர்பாபு!

Kathiravan V HT Tamil
Mar 25, 2024 02:38 PM IST

”இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருமையில் ’வாடா போட்டா’ என்று பேசிக்கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது”

திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்!
திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்!

ட்ரெண்டிங் செய்திகள்

வடசென்னையில் 

திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் உள்ளிட்டோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். 

பௌர்ணமி

இன்று பௌர்ணமி நாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். 

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி சார்பில் மிண்ட் பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவகத்தில் திமுக-அதிமுக கட்சிகள் இடையே யார் முதலில் வேட்புமனுத்தாக்கல் செய்வது என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருமையில் ’வாடா போட்டா’ என்று பேசிக்கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அதிமுக வேட்பாளர் ஆர்.மனோவுக்கு 7ஆம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே திமுக சார்பில் காலை 9 மணிக்கு 2ஆம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. 

வேட்புமனு தருவதற்காக காலையில் வேட்பாளர் கலாநிதி வீராசாமி பெயரில் 10 மணிக்கு காவல்துறை பதிவேட்டில் பதிவு செய்து, 2ஆம் எண் டோக்கன்  உடன் சென்றோம். ஆனால் அதிமுகவினர் எங்கள் உடனே அவர்களும் கும்பலாகவே வந்துவிட்டு, எங்கள் வேட்பாளர் முன் கூட்டியே வந்துவிட்டார் என்று வாக்குவாதம் செய்தார்கள்.

எதிரிகள் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்த கூடும், எங்கும் சிறு அசம்பாவிதம் இடமளிக்க கூடாது என்ற முதல்வர் வழிகாட்டுதல்படி  முறையிட்டோம் என்றார். தொடர்ந்து பேசிய சேகர்பாபு, பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ’இன் சைட் தி சீன்’ இல்லவே இல்லை; தேர்தல் அதிகாரியை மிரட்ட வேண்டிய அவசியமே இல்லை என கூறினார். 

அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை புகார்!

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை புகார் அளித்தார்.  செய்தியாளர்களை சந்தித்த அவர், வட சென்னைக்கு நாங்கள்தான் முதலில் சென்றோம். அவரோடு சென்ற 20 பேரையும் அனுமதித்துள்ளனர். வேட்புமனுத்தாக்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளது. யார் முதலில் வந்தார்களோ அவர்களுக்கு அனுமதி தர வேண்டும், முதலில் அதிமுக வந்தது, இரண்டாவது திமுக வந்தது. 

ஆனால் திமுகவின் டம்மி வேட்பாளருக்கு டோக்கன் வாங்கிவிட்டோம் என சொல்வது விதிகளுக்கு உட்பட்டது அல்ல; மாநகராட்சி அதிகாரியை மிரட்டி உள்ளனர். இது தேர்தல் நடந்தை விதிகளுக்கு எதிரானது. திமுகவின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று முதலில் கூறுவோம். 

ஆளுங்கட்சி தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் அச்சுறுத்தி இதுபோல் செய்கின்றனர். நேர்மையான தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகத்தை எங்களுக்கு எழுப்பி உள்ளது என கூறினார்.

பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் பேட்டி!

பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கூறுகையில், கடந்த 2 மணி நேரமாக பாஜக வேட்புமனுத்தாக்கலுக்காக வந்து இருக்கும் எங்களை இங்கேயே அமர வைத்து திமுக-அதிமுக கள்ள நாடகம் ஆடுகிறது. இதற்கு அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான நாடகம். திராவிட கட்சிகள் தோற்பது உறுதி என்பதை பதிவு செய்யும் விதத்தில் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். 

தேர்தல் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். தேர்தல் ஆணையம் இருவரில் ஒருவரை கைது செய்து இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒழுக்கமாக தேர்தலை நடத்தவில்லை. இருவரும் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். 

எனக்கு டோக்கன் கொடுத்தார்களே தவிர ஸ்லாட் தரவே இல்லை, ஈகோ பிரச்னையால் 2 மணி நேரமாக காத்திருக்கிறோம் என கூறினார். 

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், ராயபுரம் மனோ வேட்புமனுத்தாக்கல் செய்தார்.  முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் நாங்கள் 5 பேர் மட்டும் சென்றோம். 

11.49மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம். எங்களுக்கு ஒதுக்கப்பட நேரத்தில் திமுகவினர் உள்ளே வந்துவிட்டனர் என கூறி உள்ளார். 

WhatsApp channel

டாபிக்ஸ்