TTV Dinakaran: ’ஸ்டாலினை ஜெயிக்க வைக்கவே அதிமுக தேர்தலில் போட்டியிடுகிறது!’ டிடிவி தினகரன் சரமாரி புகார்!
”TTV Dinakaran: அதிமுக இந்த தேர்தலில் திமுக உடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதை தடுத்து ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தர வேண்டும் என்பதற்காக அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது”
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், பாஜக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தி கூட்டணிக்கும்தான் தமிழ்நாட்டில் போட்டி நிலவுகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை உடன் போராடி மீனவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. 1974ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கருணாநிதி அவர்கள்தான் இந்த வரலாற்று பிழைக்கு காரணம்.
அதிமுக இந்த தேர்தலில் திமுக உடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதை தடுத்து ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தர வேண்டும் என்பதற்காக அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ரொம்ப கோபமாக ஆக்ரோஷமாக பேசுவார். அவர் இவ்வளவு கோபபட்டு பேசுவது சரியா என்பதை அவர் யோசிக்க வேண்டும். நான் அவருக்கு சின்னம் கிடைக்க கூடாது என்று நான் சொல்லவில்லை; அவருக்கு சின்னம் கிடைக்காதது குறித்து எனது கருத்தை நான் சொன்னேன்.
சீமான் அவர்கள் மைக் சின்னம் கேட்டபோது நாங்கள் கேட்கவில்லை தேர்தல் ஆணையம் தந்ததாக கூறினார். அமமுக 2019ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் போட்ட பிறகு 2020 நவம்பர் மாதத்தில்தான் அமமுகவை தேர்தல் ஆணையம் பதிவு செய்தது. தேர்தல் ஆணையத்தில் குக்கர் சின்னம் கேட்டபோது அதை கொடுத்தார்கள். அப்போது 2 பொதுத்தேர்தல்களுக்கு இந்த சின்னத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் சொன்னார்கள்.
சீமான் வீர ஆவேசமாக பேசுவதால் ஏதும் உண்மையாகிவிடாது. நான் கைது செய்யப்பட்ட வழக்கில் நான் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாக சீமான் பேசுகிறார். சீமானுக்கு சின்னம் கிடைக்கமல் போனதில் எனக்கு என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது. சீமான் அவர்களை நான் நண்பராகத்தான் பார்க்கிறேன்.
என்னை பொறுத்தவரை அமமுகவுக்கு திமுகதான் எதிரி; அதிமுகவை கையில் வைத்திருக்கும் துராகிகளிடம் இருந்து கட்சியை மீட்டெக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.
வரும் 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் தேனியில் ரோட்ஷோ நடத்துகிறார். பிறகு மதுரையில் பொதுக்கூட்டமும், 5ஆம் தேதி தென்காசியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
மோடி மூன்றாவது முறை இந்திய பிரதமராக வரப்போகிறார். அவரை போய் உதயநிதி ஸ்டாலின் பேசுவது அவரது வயதுக்கு அழகல்ல. தேனி தொகுதியில் நான் பேசும் இடங்களில் எல்லாம் பெண்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
அம்மா இருந்தபோது மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்.
என்னுடைய உயரம், என்னுடைய பலம் என்ன என்று எனக்கு தெரியும். ஆர்.பி.உதயகுமார் “நாங்களெல்லாம் நாயாக இருந்தோம். இப்போது சிங்கம் ஆக மாறிவிட்டோம்” என சொல்கிறார். நாய் எப்படி சிங்கமாக மாறும் நாய் ஓநாயாக வேண்டுமானால் மாறலாம்.
அமைச்சர் மூர்த்தி பதற்றில் பேசி வருகிறார். தேனி தொகுதிகள் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பார்த்து வருகிறார்கள். என்னோடு 25 ஆண்டுகள் தொடர்பு உடையவர்களாக தேனி மக்கள் உள்ளனர்.
டாபிக்ஸ்