T. T. V. Dhinakaran: தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி.. திருச்சி தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  T. T. V. Dhinakaran: தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி.. திருச்சி தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார்

T. T. V. Dhinakaran: தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி.. திருச்சி தொகுதிக்கும் வேட்பாளரை அறிவித்தார்

Manigandan K T HT Tamil
Mar 24, 2024 09:35 AM IST

T. T. V. Dhinakaran: பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, தமாகா, தமிழர் மக்கள் முன்னேற்றக் கழகம், ஐஜேகே, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளன. இதில் அமமுக திருச்சி, தேனியில் போட்டியிடுகிறது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக தற்போது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. திருச்சி தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, தமாகா, தமிழர் மக்கள் முன்னேற்றக் கழகம், ஐஜேகே, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளன. இதில் அமமுக திருச்சி, தேனியில் போட்டியிடுகிறது.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் பாதுகாப்புக்காகவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியா முன்னேறிய நாடாக உருவாவதற்கும் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை தமிழக மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம்.

உள்ளார். மீண்டும் அவர் தான் மூன்றாவது முறையாக பிரதமராக வரப் போகிறார்.

நமது தேனி மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பெற்றுத் தருவதற்கு உரிய அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். தேனி மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்பது எனக்கு தெரியும். மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்வார்கள். எனது பணி 15 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவுகூரப்படுகிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இந்த தொகுதியை எப்படி நேசிக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நான் பிறந்தது தஞ்சை மண். அரசியலில் நான் பிறந்தது தேனி மண்.

இந்த தேனியில் மீண்டும் பணியாற்றுவதற்கு காலம் நல்ல வாய்ப்பை கொடுத்து இருக்கிறது. இந்தத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவேன் என்பது அனைவருக்கும் தெரியும். டிடிவி என்றால் தொகுதிக்கு தவறாமல் வருபவன் என்ற பெயரை கொடுத்ததே தேனி மக்கள் தான். மக்கள் செல்வன் என்ற அங்கீகாரம் தேனிவாழ் மக்கள் கொடுத்தது. இது யாரோ தனிநபர் கொடுத்தது இல்லை. அவர்கள் வீட்டு பிள்ளையாக சகோதரனாக  போட்டியிடுகிறேன். நான் அமமுக சார்பாக மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களின் சார்பாகவும் போட்டியிடுகிறேன் என்றார் டிடிவி தினகரன்.

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளராக உள்ளார் செந்தில்நாதன்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ராஜ்கர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

யார் இந்த அஜய் ராய்?

  •  பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அஜய் ராய், 1996 மற்றும் 2007 க்கு இடையில் கோலாஸ்லா தொகுதியில் இருந்து பாஜக அளித்த இடத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை உ.பி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
  •  மக்களவை வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.
  • 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அஜய் ராய், 2012ல் காங்கிரசில் இணைந்து, உ.பி., சட்டசபை தேர்தலில், பிந்த்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2017 ஆம் ஆண்டில், ராய் காங்கிரஸ் வேட்பாளராக பிந்த்ரா தொகுதியில் மாநில தேர்தலில் தோல்வியடைந்தார்

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.