Katchatheevu Island History: 163 ஏக்கர் நிலப்பரப்பு - கச்சத்தீவு வரலாறும், அரசியல் பின்னணியும்! நடந்தது என்ன?
- கச்சத்தீவு தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ தாக்கல் செய்தார். அதில், இந்தியா -இலங்கை இடையிலான உறவுகளை பேணுவதற்கு 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது ஆட்சியமைத்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 163 ஏக்கர் கொண்ட கச்சத்தீவு நிலத்தை இலங்கைக்கு வழங்கியது.
- கச்சத்தீவு தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ தாக்கல் செய்தார். அதில், இந்தியா -இலங்கை இடையிலான உறவுகளை பேணுவதற்கு 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது ஆட்சியமைத்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 163 ஏக்கர் கொண்ட கச்சத்தீவு நிலத்தை இலங்கைக்கு வழங்கியது.
(1 / 6)
கடந்த சில மாதங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் காங்கிரசை நோக்கி கச்சத்தீவு தொடர்பான பிரச்னையை எழுப்பினார். இந்த மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், அந்த தீவு பிரச்னையை மீண்டும் எழுப்பு திராவிட கட்சிகளின் வாக்குகளை பெற முயற்சிக்கிறார்
(2 / 6)
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு உள்ளது. இந்த தீவு பகுதிகளில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், 1974ஆம் ஆண்டு இந்திய - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் மூலம் அந்த 163 ஏக்கர் தீவை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது. இந்த தீவு தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்ததால், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. நட்புறவின் சின்னமாக கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது
(3 / 6)
இந்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாடு மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இருந்து நூறாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் இருந்து வந்தது. இந்த தீவு அளிக்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படையினர் இந்தியர்களை தீவு பகுதியில் நெருங்க அனுமதிப்பதில்லை. ஆனாலும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கையானது இன்று வரை தொடர்ந்து வருகிறது
(4 / 6)
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உள்ள இலங்கை வெளிப்படுத்தும் ஆதிக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுத் தருமாறு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், கச்சத்தீவு ஒப்படைக்கும் பொறுப்பை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கைவிட்டதாக பழிசுமத்தி அரசியல் ஆதாயம் அடைய பாஜக முயற்சித்து வருகிறது
(5 / 6)
அரசு ஆவணங்களின்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, சுதந்திரத்துக்கு பிறகு கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடத் தொடங்கியது. 1955இல் அப்போதைய இலங்கை விமானப்படை கச்சத்தீவு பகுதியில் பயிற்சிகளை நடத்தியது. 1961ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கச்சத்தீவு பிரச்னையை மிகவும் அற்பமான விஷயம் என்று கூறியதுடன், இந்த சிறிய தீவில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அந்தத் தீவின் மீதான இந்தியாவின் உரிமையை வாபஸ் பெறுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்
(6 / 6)
এদিকে ১৯৬০ সালে ভারতের তৎকালীন অ্যাটর্নি জেনারেল এসম সি সেতালভাদ জানিয়েছিলেন যে কচ্ছতিভু দ্বীপের বিষয়টি নিয়ে দিনের আলোর মতো স্বচ্ছতা না থাকলেও ওই দ্বীপের উপর ভারতের বেশি অধিকার আছে। ভারতের হাতেই কচ্ছতিভু দ্বীপ রাখার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের তৎকালীন যুগ্মসচিব কে কৃষ্ণ রাও জানিয়েছিলেন, কচ্ছতিভু দ্বীপ নিয়ে শ্রীলঙ্কা যে দাবি করছে, সেটার মজবুত ভিত্তি আছে। কিন্তু সেটার মানে এই নয় যে ভারতের কোনও দাবি নেই।
மற்ற கேலரிக்கள்