Loksabha Election: காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆப்பு! 11 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Loksabha Election: காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆப்பு! 11 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Loksabha Election: காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆப்பு! 11 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Kathiravan V HT Tamil
Mar 29, 2024 04:57 PM IST

”இந்த விவகாரத்தில் நாங்கள் சட்ட உதவியை நாடுகிறோம், எங்கள் வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசிக்கிறோம் என்று சிபிஐ மூத்த தலைவர் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்”

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது

நாடாளுமன்றத் தேர்தல் 2024

இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 

வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

வருமானவரித்துறை நோட்டீஸ்!

கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக 11 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துமாறு வருமான வரித்துறையிடம் இருந்து கம்யூனிஸ்டு கட்சிக்கு நோட்டீஸ் வந்துள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிவிப்பை எதிர்கொள்ள வழக்கறிஞர்களுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  ஆலோசித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. 

வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய "நிலுவைத் தொகையில்" பழைய பான் கார்டைப் பயன்படுத்துவதில் "முரண்பாடுகளுக்கு" அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய அபராதம் மற்றும் வட்டி ஆகியவை அடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. 

இந்த விவகாரத்தில் நாங்கள் சட்ட உதவியை நாடுகிறோம், எங்கள் வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசிக்கிறோம் என்று சிபிஐ மூத்த தலைவர் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார். 

காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்!

1,823.08 கோடி செலுத்துமாறு வருமான வரித் துறை காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர். இது தொடர்பாக பேசி உள்ள காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான், பாஜக குறிப்பிடத்தக்க மீறல்களைச் செய்தாலும், காங்கிரஸ் கட்சி வருமான வரி அதிகாரிகளால் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி உள்ளார். 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கான், பாரதிய ஜனதா கட்சி வருமான வரிச் சட்டங்களை கடுமையாக மீறுவதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் இருந்து ரூ.4,600 கோடிக்கு மேல் கோரிக்கையை வரித்துறை அதிகாரிகளிடம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வரி வருமானத்தில் உள்ள முரண்பாடுகளுக்காக ரூ .1,823 கோடிக்கு மேல் நிலுவைத் தொகையை செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகளை முடக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. "காங்கிரஸை நிதி ரீதியாக முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் நாங்கள் பயப்படப் போவதில்லை" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.