தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘கொங்கு கோட்டையை மீண்டும் பிடிக்குமா அதிமுக!’ பொள்ளாச்சி தொகுதி கள நிலவரம் இதோ!

HT MP Story: ‘கொங்கு கோட்டையை மீண்டும் பிடிக்குமா அதிமுக!’ பொள்ளாச்சி தொகுதி கள நிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 09, 2024 06:00 AM IST

”இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 7 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது”

பொள்ளாச்சி தொகுதி கள நிலவரம்
பொள்ளாச்சி தொகுதி கள நிலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி!

2009 தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி உள்ளது. 

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, பொங்கலூர், தாராபுரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 

அதிக முறை வெற்றி பெற்ற அதிமுக!

இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 7 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது. 

அமோக வெற்றி பெற்ற திமுக!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.சண்முக சுந்தரம் 554,230 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். 

அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மகேந்திரன், 3,78,347 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூகாம்பிகை 59,693 வாக்குகளையும். நாம் தமிழர் கட்சியின் சனுஜா 31,483 வாக்குகளையும் பெற்றனர். 

தற்போது யார்?

தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஈஸ்வர ஸ்வாமி வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். அதிமுக சார்பில் ஏ.கார்த்திகேயன், பாஜக சார்பில் வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

களம் யாருக்கு?

பத்து ஆண்டுகால மோடி அரசின் மீதான அதிருப்தி, கூட்டணி பலம், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு உள்ளிட்டவை திமுகவின் பலமாக உள்ளது. 

திமுக அரசின் மீதான அதிருப்தி, அதிமுகவின் கட்டமைப்பு, கொங்கு சமூக மக்கள் ஆதரவு உள்ளிட்டவை அதிமுகவுக்கு பலமாக உள்ளது.

மோடி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்களின் ஆதரவு பாஜகவின் பலமாக உள்ளது. 

தேசிய மற்றும் திராவிட கட்சிகளுக்கு மாற்று எதிர்பார்ப்போர், இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு பலமானதாக அமையும். 

WhatsApp channel