Balloon Festival: பொள்ளாச்சியில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா!
பொள்ளாச்சியில் ஒன்பதவது சர்வதேச பலூன் திருவிழா உற்சாகமாக துவங்கி உள்ளது. வானில் பறந்த பலூன்களை கண்டு சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
பொள்ளாச்சியில் ஒன்பதவது சர்வதேச பலூன் திருவிழா உற்சாகமாக துவங்கி உள்ளது. வானில் பறந்த பலூன்களை கண்டு சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் இந்த திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக இந்த சர்வதேச பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் பலூன்திருவிழா எனவும் இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட் 8 நாடுகளில் இருந்து, 11 வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது, தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தவக்களை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன.
இதை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொள்ள உள்ளார், மூன்று நாட்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படுகிறது.
நிலை நிறுத்தப்பட்ட பலூனில் ஏற ஒரு நபருக்கு சுமார் 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பலூன்களில் இருக்கும் இடத்திலிருந்து வானில் உயரமாக பலூன்கள் பறக்க விடப்படுகிறது.
இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரம்யமான அதிகாலை வானில் பறந்த பலூன்கள் அணிவகுத்து செல்வது பார்ப்பதற்கு கண் கவரும் விதமாக உள்ளது எனவும் புதிதாக குழந்தைகளை கவரும் விதமாக பலூன்கள் உள்ளது. சர்வதேச பலூன் திருவிழாவிற்கு ஐந்து துறைகளில் அனுமதி வாங்காததால் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாக வருவாய்த்துறை என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்