தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Eps Campaign: அமைச்சர் உதயநிதியின் முதலமைச்சர் கனவு பலிக்காது - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு!

EPS Campaign: அமைச்சர் உதயநிதியின் முதலமைச்சர் கனவு பலிக்காது - ஈபிஎஸ் பரபரப்பு பேச்சு!

Karthikeyan S HT Tamil
Apr 11, 2024 09:07 PM IST

Lok Sabha Elections 2024: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசிர்வாதம் உள்ளவரை அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஒவ்வொரு திட்டத்திற்கும் குழு போடும் அரசாகவே திமுக அரசு உள்ளது. தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல; குழு அரசாங்கத்தை நடத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுவரை 52 குழுக்களை போட்டிருக்கிறார்கள், ஒன்றும் செயல்படவில்லை. ஒவ்வொரு திட்டத்திற்கும் குழு போடும் அரசாகவே திமுக அரசு உள்ளது. திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது. மக்களுக்கு கிடைக்கின்ற அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி உள்ளது.

திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. நான் ஒரு விவசாயி; விவசாயிகள் மட்டுமே யாருக்கும் பயப்பட மாட்டார்கள். என்னை விமர்சிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? அதிமுக ஆட்சியில் மட்டுமே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. உணவு உற்பத்தி அதிகரிப்பிற்கு தேசிய அளவில் அதிமுக அரசுக்கு விருது கிடைத்தது. இந்தியாவிலேயே 140 விருதுகளை பெற்ற அரசு அதிமுக அரசுதான்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது மிகப்பெரிய கேள்விக்குறி. இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இன்னும் பிரதமர் வேட்பாளர் யார் என்றே இந்தியா கூட்டணி அறிவிக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் மட்டும் எப்படி இந்தியா கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக அரசை நடத்துவார்கள்." என கேள்வி எழுப்பினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை ரத்து செய்ததே திமுகவின் ஒரே சாதனை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் வீட்டு மக்களை பற்றிய சிந்தனை மட்டுமே உள்ளது. அமைச்சர் உதயநிதியின் முதலமைச்சர் கனவு பலிக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரின் ஆசீர்வாதம் உள்ளவரை, அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்." என்று அவர் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் 2024:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்